கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு தற்போது போடப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.




 


இந்நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசர கால தேவைக்குப்ப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக வல்லுநர் குழு கூடி செய்த நிலையில், அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் தயாரித்து வழங்க உள்ளது.


 


இந்தியாவில் கொரோனாவை தடுக்க அனுமதிக்கப்பட்டுள்ள மூன்றாவது தடுப்பூசி ஸ்புட்னிக் -வி ஆகும்.