இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 6-வது நாளாக இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. இந்த தாக்கம், இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தையும் விட்டு வைக்கவில்லை. 


இந்திய உச்ச நீதிமன்றத்தல்  பணிபுரியும் ஊழியர்களில் 50 சத வீதத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


இதன் காரணமாக, உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைகள் காணொளி மூலம் மட்டுமே நடைபெற இருப்பதாக டெல்லியில் இருந்து வரும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. 


நீதிபதி அறைகள், நீதமன்ற வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கிருமி நீக்கம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நீதிபைகள் வீட்டில் இருந்து கொண்டு காணொளி மூலம் வழக்குகளை விசாரிக்க உள்ளனர்.     


இந்தியாவில் கொரோன நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,70,195 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது.  கொரோனா தினசரி உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.