ஆந்திராவில் புதிதாகக் கண்டறியப்பட்டிருக்கும் கொரோனா வகை 10 மடங்கு வீரியமானது என்கிற தகவலை முழுக்க முழுக்கப் பொய் என்று மறுத்துள்ளது மத்திய அரசு ஆய்வு நிறுவனம் சி.சி.எம்.பி., ஆந்திராவில் N440K

   என்னும் புதிய ரக கொரோனா வைரஸ் விசாகப்பட்டினம் மற்றும் குர்னூல் மாவட்டங்களில் பரவிவருவதாகவும் இது பிரிட்டன் இனவகை மற்றும் இந்திய இனவகை கொரோனா வைரஸ்களை விட மிகவும் வேகமாகப் பரவக்கூடியது என்றும் இதனால் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் பரவலாகப் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் இது கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் தென்படுகிறது எனச் செய்திகள் வெளியானது.




அந்தத் தகவலைத் தற்போது முழுக்க முழுக்கப் பொய் என்று மறுத்துள்ளார் சி.சி.எம்.பி இயக்குநர். அவரது மறுப்பறிக்கையில், ‘ஆந்திர இனவகை என்று புதியதாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் அது 10 மடங்கு வேகமாகப் பரவுகிறது என்பதும் தவறு. இந்த N440K ஏற்கெனவே பரவலாக இருந்து வரும் வைரஸ்தான். இது தற்போது விசாகப்பட்டினத்தில் வெறும் 5 சதவிகிதம்தான் தென்படுகிறது. அதனால் வீண் வதந்திகளை நம்பவேண்டாம்’ எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.


Also Reads: இந்தியாவில் 3வது அலை தவிர்க்க முடியாதது; முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் விஜய் ராகவன்