மகாராஷ்டிரா நாசிக்கின் பிம்பால்கான் சுங்கச்சாவடியில் இரண்டு பெண்கள் சண்டையிட்டு கொள்ளும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. சண்டை போட்டு கொண்டவர்களில் ஒருவர் சுங்கச்சாவடி ஊழியர் போன்றும் மற்றவர் பயணி போல தெரிகிறது.
வீடியோவில், இருவரும் ஒருவரையொருவர் முடியை பிடித்து கொண்டு, அறைந்து கொள்வது பதிவாகியுள்ளது. அதற்குள் பார்வையாளர்கள் சண்டையை நிறுத்த தலையிடுகின்றனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட பயனர் ஒருவர், "நாசிக் அருகே உள்ள பிம்பால்கான் சுங்கச்சாவடியில் பெண்களுக்கு இடையே கடும் சண்டை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சேலையை அணிந்துள்ள இரண்டு பெண்கள் ஒருவரையொருவர் தாக்கி கொள்வதையும் திட்டி கொள்வதையும் அறைந்து கொள்வதையும் வீடியோவின் தொடக்கத்தில் பார்க்கலாம். அவர்களில் ஒருவர் மராத்தியில் சண்டைக்கு இடையே, சேலையை கிழித்து விடுவதாக மிரட்டுவதும் கேட்கலாம். வீடியோவின் முடிவில், மக்கள் தலையிட்டு பெண்களை விலக்குவதைக் காணலாம்.
சுங்கச்சாவடி கட்டணம் தொடர்பாக புதன்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதற்கிடையில், இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில், கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண் ஊழியர், அங்கு வந்த ஒருவரை கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதி மறுத்துள்ளார். இதையடுத்து, அந்த நபர் அவரை அறைந்தார். இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
அந்த நபர், தான் உள்ளூர்வாசி என்றும், சுங்கச்சாவடி கட்டணத்தை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஆனால், அதை நிரூபிக்க எந்த ஆவணமும் அவரிடம் இல்லை. பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மற்றொரு வைரல் வீடியோவில், பைக்கில் கம்புகளுடன் ஒரு கும்பல் சுங்கச்சாவடியை நெருங்குவதைக் காணலாம். அவர்களில் ஒருவர் சுங்கச்சாவடி தடுப்பு கம்பால் அடிப்பதைக் காணலாம். இருப்பினும், சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்கள் புகாரில் ஒருவரை மட்டுமே குறிப்பிட்டுள்ளதால் அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.