கேட்பரி டைரி மில்க்கின் ஒரு புதிய விளம்பரம் இணையத்தை கலக்கிட்டு இருக்கு. அதற்கு காரணம், 90ஸ் கிட்ஸோட  நோஸ்டால்ஜியாவ வெளிப்படுத்துறது மாதிரி 90கள்ல வெளியான ஒரு விளம்பரத்தோட கருப்பொருள், பாட்டு எல்லாத்தையும் அப்படியே வெச்சுட்டு பாலின சமத்துவம் அப்படிங்கற ஒரு முக்கியமான அரசியல தொட்டுருக்கு அப்படிங்கறதுதான். 


பழைய விளம்பறத்துல,வீரர் ஒருவர் 99 ரன்கள அடிச்சுட்டு சென்ச்சுரிய அடிக்கறதுக்காக பந்தை பவுண்டரிக்கு விரட்ட அது உயரப்  பறந்துட்டு க்ளியர் கேட்ச்சுக்கான பந்து போல் பாய பவுண்ட்ரி லைனில் ஃபீல்டர் கால் வைக்க பந்து பவுண்ட்ரியைக் கடந்துடும். இதையெல்லாம் கேலரியில் இருந்து பார்த்து ரசிச்சுட்டு இருக்கற இளம் பெண் ஒருத்தங்க  வாட்ச்மேனுக்கு போக்குக்காட்டிட்டு மைதானத்துக்குள்ள வந்துட்டு வளைந்து நெளிந்து கேட்பரிஸ் சாக்லேட்டைக் கையில வெச்சட்டு ஜாலியா டேன்ஸ் ஆடுவாங்க. அந்த விளம்பரத்தையும் அந்த பாட்டையும் 90ஸ் கிட்ஸ்  யாருமே மறந்திருக்க முடியாது.


இப்போ 25 ஆண்டுகளுக்கு அப்பறமா டெய்ரி மில்க் விளம்பரம் அதே பாட்டோட, அதே கிரிக்கெட் மைதானக் காட்சியோட  வெளியாகியிருக்கு. ஆனால் இந்தவாட்டி ஒரு ட்விஸ்ட் வெச்சுருக்காங்க. அதுதான் இப்ப பரவலா பேசப்பட்டுட்டு வருது. அப்படி அந்த விளம்பரத்துல  என்ன சிறப்புன்னா ஜெண்டர் ஸ்வாப். க்ரிக்கெட்னாலே ஆண்களுக்கான விளையாட்டு அப்படிங்கற இமேஜ் ஒரு காலத்துல இருந்தது. ஆனா அதையெல்லாம் தவிடு பொடியாக்கி இப்ப பெண்களும் கிரிக்கெட்ல சாதிச்சுட்டு வராங்க. 


இப்ப கேட்பரியோட புதிய விளம்பரத்துல அத தான் பதிவு பண்ணப்பட்டிருக்கு.  கிரிக்கெட் வீராங்கனை  வெற்றிக்கான சிக்ஸரை அடிச்சப்ப,  ஆண் ஒருத்தர் மைதானத்தில் இருக்கற பாதுகாப்பு வளையத்தைலாம் தாண்டி வந்து மைதானத்துக்கு உள்ள வந்து உற்சாகத்தோட நடனமாடுறாரு. இந்த 2 விளம்பரங்களிலேயும்  வெற்றி மற்றும் வெற்றியின் உணர்ச்சிக் கொண்டாட்டங்கள் மாறாமல் அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கு. 



இந்த ரோல் ரிவர்சல் விளம்பரத்தின் மூலம், பெண்கள் எவ்வளவு முன்னேறியிருக்காங்க அப்படிங்கறதும் அதே நேரத்தில வெற்றிக்கும் அத கொண்டாடுறதுக்கும் எந்த ஜெண்டரும் தேவையில்ல அப்படிங்கறதும் பதிவு பண்ணப்பட்டுருக்கு. முக்கியமா பாலின பேதங்களை உடைக்கிற வகையில எடுக்கப்பட்டுருக்கு.


இதுல இன்னும் ஒரு கூடுதல் தகவல் என்னன்னா முதல்ல எடுக்கப்பட்ட அந்த விளம்பரம், ஒரு உண்மை கதைய மையமா வெச்சுதான் எடுக்கப்பட்டிருக்காம். இந்தியாவுக்கும் வெஸ்ட் இண்டீசுக்கும் மேட்ச்  நடந்துட்டு இருந்தப்போ இந்திய கிரிக்கெட் வீரர் ப்ரிஜேஷ் படேல் அரை சதம் அடிச்சிருக்காரு.. அவர் அடிச்சதுமே கேலரில இருக்கற சேலைக் கட்டின பெண் ஒருத்தங்க செக்யூரிட்டிஸ் எல்லாம் சமாளிச்சு மைதானத்த நோக்கி ஓடி வந்து ப்ரிஜேஷ்க்கு முத்தம் கொடுக்கறாங்க.. சோ இந்த சம்பவத்த மையமா வெச்சு கேட்பரி அந்த விளம்பரத்த எடுத்திருக்கலாம் அப்படினு சொல்லப்படுது.