சினிமா பிரபலங்களான கமல்ஹாசன், அனுஷ்கா, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோருக்கு இன்று பிறந்தநாள் ரசிகர்களால் கொண்டாடப்படும் நிலையில் வேறு சில பிரபலங்களுக்கும்  பிறந்தநாள் என்பது பலருக்கும் தெரியாது. அதனைப் பற்றி காணலாம். 


மேரி கியூரி 


20 நூற்றாண்டின் வரலாற்றை புரட்டிப் போட்டவர், பிரான்ஸ் நாட்டின் சிறந்த ஆளுமைமிக்க விஞ்ஞானி என போற்றப்படுபவர் மேரி கியூரி. அவர் 1867 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி தான் பிறந்தார். நோபல் பரிசு பெற்ற முதல் பெண் மேரி கியூரி என பலரும் அறிந்திருந்தாலும், அவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக என 2 நோபல் பரிசு வென்றது பலருக்கும் தெரியாத தகவல். இவர் ரேடியம் என்ற கதிரியகத்தை கண்டுபிடித்தார். ஆனால் அதே கதிரியக்கம் தான் அவருடைய மரணத்திற்கும் காரணமானது என்பது சோகமான சம்பவம்.


இவரின் முயற்சியால் தான் பாரிஸ் ரேடியம் கழகமும், வார்ஸா ரேடியம் கழகமும் கதிரியக்க ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டது. முதல் உலகப்போரில் உயிர் இழப்புகள் ஏற்பட்ட, அவை மேரி கியூரியை வெகுவாக பாதித்தது. உடனே எக்ஸ்-ரே கருவிகளை உருவாக்கி அவற்றை வாகனங்களில் நிறுவி போர்க்களத்திற்கே அனுப்பினார். இந்த ஊர்திகள் லிட்டில் கியூரிகள் என அழைக்கப்படுகிறது. மேரி கியூரின் மகள்களில் ஒருவரான ஐரினும் பிற்காலத்தில் அறிவியலுக்கான நோபல் பரிசு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


சர்.சி.வி.ராமன்


நோபல் பரிசை வென்ற முதல் தமிழர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் சர்.சி.வி.ராமன் கூட 1888 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி பிறந்தார். இவர் ஒளியின் மூலக்கூறு சிதறல் என சொல்லப்படும் ‘ராமன் விளைவு’ கோட்பாடு என்ற ஒன்றை மிகுந்த சிரமங்களுக்கு இடையே கண்டுபிடித்தார். இது புற்றுநோய் கண்டறிதல், தோலின் வழியாக மருந்தை செலுத்துதல், எலும்புத்தன்மைப் பகுப்பாய்வு, ரத்தகுழாயில் கொழுப்பு படிவதை கண்டறிதல் என பல விஷயங்களில் பயன்படுத்தப்படுகிறது. திருச்சியில் பிறந்த சர்.சி.வி.ராமன் அவரது ராமன் விளைவை அறிவித்த பிப்ரவரி 28 ஆம் தேதி “அறிவியல் தினம்” ஆக கொண்டாடப்படுகிறது. இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஒரே இந்தியர் சர்.சி.வி.ராமன் என்பதால் அவரை கௌரவிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 




மேலும் படிக்க: Yakuza ThugLife Movie: 'யகூசா'வுக்கு என்ன அர்த்தம்? புது அவதாரம் எடுத்த கமல்ஹாசன்!