தமிழ்நாடு:



  • மாலத்தீவினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்திடுக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்

  • ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க அனுமதி கோரி ஓ.என்.ஜி.சி கோரிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு, திமுக அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தல்

  • தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

  • தான்சானியா நாட்டில் சர்வதேச கல்வி வளாகத்தை திறந்தது சென்னை ஐ.ஐ.டி 

  • லெவல் கிராசிங்க்கு பதிலாக சிறிய சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணி தொடக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு 

  • காரைக்குடியில் எட்டாம் வகுப்பு மாணவி காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு, அச்சத்தில் பொதுமக்கள்

  • விருதுநகரில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு 

  • நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல், வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களில் பெயர் சேர்க்க, திருத்த 6 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

  • களைகட்டிய தீபாவளி பண்டிகை விற்பனை - கடை வீதிகளில் மக்கள் குவிந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி 

  • ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்கும் பணி தடுத்து நிறுத்த வேண்டும் - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்


இந்தியா: 



  • சத்தீஸ்கரில் இன்று முதல்கட்ட தேர்தல், வாக்குப்பதிவு நடக்கும் 20 தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு 

  • மிசோரம் சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல், 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு

  • காசா மீதான தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியா அனைத்து திறன்களையும் பயன்படுத்தும், பிரதமர் மோடியுடனான தொலைப்பேசி உரையாடலுக்கு பின் ஈரான் அதிபர் நம்பிக்கை

  • மணிப்பூரில் இணையதள சேவை தடை மேலும் நீடிப்பு - மாநில அரசு அறிவிப்பு 

  • டெல்லியில் மோசமடையும் காற்றின் தரம் - 10 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை 

  • ஒடிசா மற்றும் ஆந்திரா ரயில் விபத்து தொடர்பாக நாடாளுமன்ற சபாநாயகர் ஓம். பிர்லாவுக்கு, திமுக எம்.பி டி.ஆர் பாலு கடிதம்

  • உத்தரகாண்ட்: ரயில்வே சுரங்கத்தில் திடீர் தீ விபத்து, 40 தொழிலாளர்கல் மீட்பு


உலகம்: 



  • காசா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்ததாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தகவல்

  • குழந்தைகளின் இடுகாடாகும் காசா - ஐ.நா வேதனை, உடனடியாக போர் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தல்

  • இஸ்ரேல் காசா போர்: போரினை இடைநிறுத்தம் செய்யும் சாத்தியக்கூறுகள் குறித்து இஸ்ரேல் பிரதமருடன் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆலோசனை

  • 32 வது நாளாக தொடரும் போர், காசாவை சுற்றிவளைத்த இஸ்ரேல் ராணுவம்

  • வட கொரியாவை உளவு பார்க்கும் முதல் செயற்கைக்கோள், நாள் குறித்த தென் கொரியா


விளையாட்டு: 



  • உலகக்கோப்பை போட்டியில் இலங்கையை வீழ்த்தியது வங்கதேசம், டெல்லியில் நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

  • உலகக்கோப்பை போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை 

  • கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ’ டைம்டு அவுட்’ என்ற முறையில் அவுட் கொடுக்கப்பட்ட வீரரானார் மேத்யூஸ்