By Election Results 2023: 6 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 4 இடங்களை எதிர்கட்சிகள் கைப்பற்றிய நிலையில், 3 இடங்களின் பாஜக வென்றுள்ளது. இதில் 2 தொகுதியில் இந்தியா கூட்டணியும், கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு தொகுதியில் வெற்றிப்பெற்றுள்ளன.


இடைத்தேர்தல்:


கடந்த 5ம் தேதி உத்தரபிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 7 தொகுதிகளுக்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.  மேற்கு வங்கத்தின் துக்புரி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்ரி, திரிபுராவின் போக்ஸாநகர் மற்றும் தான்பூர், உத்தரபிரதேசத்தின் கோசி, மேற்கு வங்கத்தில் துப்குரி மற்றும் கேரளாவின் புதுப்பள்ளி உள்ளிட்ட தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 


முதல் முறையாக இந்தியா கூட்டணிக்கும், பாஜகவின் என்.டி.ஏ. கூட்டணிக்கும் இடையில் நடைபெறும் தேர்தல் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் உத்தரபிரதேசத்தில் உள்ள கோசி தொகுதியில் இந்தியா கூட்டணியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட தாரா சிங் சவுகான் 42,759 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார். திரிபுராவில் போக்ஸாநகரில் 30,000 வாக்குகளும், தான்பூரில் 18,871 வாக்குகளும் பெற்று பாஜக வேட்பாளர்கள் வெற்றிப்பெற்றுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் பகேஷ்வர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பார்வதிதாஸ் காங்கிரஸ் வேட்பாளரை 2400 வாக்குகள் வித்யாசத்தில் தோற்கடித்து வெற்றிப்பெற்றுள்ளார். 


திரிணாமுல், காங்கிரஸ்:


ஜார்கண்ட் மாநிலம் தும்ரி தொகுதியில் முத்தி மோர்ச்சா கட்சி சார்பில் உயிரிழந்த சட்டமன்ற வேட்பாளரின் இடத்தை அவரது மனைவி பீபி தேவி  கைப்பற்றியுள்ளார். மேற்கு வங்கத்தில் பாஜகவை தோற்கடித்து திரிணாமூல் காங்கிரஸ் வெற்றிப்பெற்றுள்ளது. கேரளாவில் புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் வெற்றி பெற்றுள்ளார். 


கேரள முன்னாள் முதலமைச்சர் மறைந்த உம்மன் சாண்டி 53 ஆண்டுகளாக புதுப்பள்ளி தொகுதியை வென்று சாதனை படைத்தது வந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் மறைந்ததால், அந்த இடத்தில் அவரது மகன் போட்டியிட்டு வென்றுள்ளார். இதேபோன்று, ஜார்க்கண்டில் அமைச்சர் ஜெகநாத் மஹ்தோவின் மறைவுக்கு பிறகு காலியான தும்ரி தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பில் அமைச்சரின் மனைவி பெபி தேவி போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ளார். 


மேலும் படிக்க: CM Stalin On Marimuthu:"மூட நம்பிக்கைகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய மாரிமுத்து” முதலமைச்சர் ஸ்டாலின் புகழஞ்சலி..!


G20 Summit Delhi: இந்தியா வந்தார் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்...பன்மடங்கு பாதுகாப்பில் டெல்லி..!