உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. உத்தரப்பிரதேசம் நஜிபாபாத்தில் இருந்து ஹரித்வாருக்கு 36-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது பிஜ்னூர் கோட்வாலி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த பேருந்து சிக்கிக்கொண்டது.
வெள்ளத்தில் சிக்கிய பேருந்து:
அப்போது உதவி கேட்டு பயணிகள் அலறி உள்ளனர். சிலர் ஜன்னல் வழியாக தப்பிக்க முயன்றனர்.அப்போது ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லாமல் தடுத்த நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு, பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.
இது குறித்த வீடியோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது.
வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. அந்த பேருந்தில் பயணித்த யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க,