வாரணாசி மேம்பாட்டு ஆணையம் அண்மையில் மேலும் ஒரு பாஜக தலைவரின் கட்டட ஆக்கிரமிப்பை அண்மையில் இடித்துள்ளது. அந்த நகர குடியிருப்புப் பகுதியில் பாஜக மாவட்டத் துணைத்தலைவரான சத்யபிரகாஷ் சிங் என்கிற அகண்ட் சிங் ஒரு அதிகப்படியான கட்டுமானத்தை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.இதற்கிடையேதான் அந்தப் பகுதி பெண்கள் அவருக்கு எதிராகப் புகார் அளித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அண்மையில்தான் நொய்டாவின் பாஜக தலைவர் ஸ்ரீகாந்த் தியாகி மீது இதுபோன்றதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்தனைக்கும் அவர் பாஜக மூத்த தலைவர்களுடன் தொடர்புடையவர்.பாஜக விஐபி வாகனம் ஒன்றையும் அதில் எம்.எல்.ஏ என்கிற ஸ்டிக்கரையும் ஒட்டிவைத்திருந்தார் இவர். ஆனால் அவர் பாஜக பிரமுகரே அல்ல என ஜே.பி.நட்டா மறுத்திருந்தார். இந்த காலத்தில் யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். அவரை எந்த ஒரு பாஜக கூட்டத்திலும் பார்த்ததில்லை என அவர் பதிவு செய்திருந்தார். அண்மையில் ஒரு வனிகவளாக ஆக்கிரமிப்பு தொடர்பாக பெண் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து ஸ்ரீகாந்த் தியாகி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கெனவே உத்திர பிரதேசத்தில் அதித்யநாத் புல்டோசர் அரசியல் செய்வதாக விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நூபுர் சர்மா சர்ச்சை விவகாரத்தில் அலகாபாத்தில் நடந்த வன்முறைக்கு பின்னனியில் இருந்ததாக ஜாவெத் அகமது என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து பிரயாக்ராஜில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட ஜாவேத் அகமதுவின் வீட்டை மாவட்ட நிர்வாகம் இடித்தது.உத்தரப்பிரதேச அரசின் இந்த செயலுக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி சசி தரூர், ஜவஹகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்து வந்த. குடும்பத்தினரின் வீடு இடிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். சட்டத்தின் சரியான செயல்முறை ஜனநாயகத்திற்கு அடிப்படை. எந்தச் சட்டத்தின் கீழ் மற்றும் எந்தச் செயல்முறையைப் பின்பற்றி இது செய்யப்பட்டது? உ.பி., இந்திய அரசியலமைப்பில் இருந்து விலக்கு அளித்துள்ளதா? என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.