Breaking LIVE: நீட் தேர்வு தோல்வி மேலும் ஒரு மாணவி தற்கொலை.. தொடரும் சோகம்

Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு கீழே உடனுக்குடன் காணலாம்.

ABP NADU Last Updated: 08 Sep 2022 06:05 PM
கோக்ரா-ஹாட் ஸ்ரிபிங்சில் இந்திய- சீன படைகள் பின்வாங்கல்

லடாக் எல்லையிலுள்ள கோக்ரா ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இந்திய சீன படைகளை பின்வாங்க இருதரப்பும் நடவடிக்கை. எல்லையில் பதற்றத்தைத் குறைக்க இருதரப்பும்  படிப்படியாக பின்வாங்கும் என ராணுவ அமைச்சகம் தகவல்

Breaking LIVE : 2023க்குள் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு  இணைப்பு 

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டம் 2023க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் முதல்வர் ஸ்டாலின்.

Breaking LIVE : மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு -  அறிவுறுத்தல்

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பாகுபாடின்றி வேலை வாய்ப்பு அளிப்பது குறித்துபுதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்

Breaking LIVE : கூடங்குளம் அணு உலை -  தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு 

பணமோசடி வழக்கு : செந்தில்பாலாஜி வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து..!

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான பண மோசடி வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்- மதுரைக்கிளை

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என்று மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

Breaking LIVE: ஈபிஎஸ் அதிமுக அலுவலகம் செல்ல ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு..!

சென்னை அதிமுக அலுவலகத்திற்கு ஈபிஎஸ் செல்லக்கூராது என டிஜிபி அலுவலகத்திற்கு புகழேந்தி புகார் கடிதம் அளித்துள்ளார்.

Breaking LIVE: நீட் தேர்வு தோல்வி.. மேலும் ஒரு மாணவி தற்கொலை

அம்பத்தூர் சோழபுரம் பகுதியில்  மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்தன் காரணமாக தூக்கிட்டு தற்கொலை

Breaking LIVE: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் கடமை பாதையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை மற்றும் கடமை பாதையையும் இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

Breaking LIVE: 24 மணி நேரத்தில் 17 மாவட்டங்களுக்கு மழை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

Breaking LIVE: ஒழுங்குமுறை ஒப்புதல் பெற்று விரைவில் உயரும் மின் கட்டணம்..

மின் கட்டண ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பெற்ற பின்பு அடுத்த மாதம் முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.

Breaking LIVE: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி

ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. 

Breaking LIVE: வெளியான நீட் தேர்வு முடிவு.. 9 லட்சத்து 93 ஆயிரம் பேர் தேர்ச்சி..

இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.  நீட் தேர்வு எழுதிய 17லட்சத்து 64 ஆயிரம் பேரில் 9 லட்சத்து 93 ஆயிரம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Breaking LIVE: ராகுல் காந்தியின் பாத யாத்திரையை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாத யாத்திரையை கன்னியாகுமரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Breaking LIVE: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

Breaking LIVE: ஓணம் பண்டிகைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

உலகெங்கும் வாழும் மலையாள மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Background

சென்னையில் 110வது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு  நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.  இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 108 வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர் 8) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.


தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 











கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.










- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.