Breaking LIVE : காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 30 Sep 2022 07:32 PM
Breaking LIVE : சென்னை ராஜ் பவனில் நவராத்திரி விழா கொண்டாட்டம்: மக்களுக்கு அனுமதி 

 சென்னை ஆளூநர் மாளிகையில் நவராத்தி விழாவை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அக்டோபர் 5- ஆம் தேதி வரை மாலை 3 மணி முதல் 5 மணி வரை கொலுவை பார்வையிட மக்களுக்கு அனுபதி வழங்கப்பட்டுள்ளது.


பெயர், முகவரி, அடையாள அட்டை சான்றுடன் navaratrirb22@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு வருகை உறுதிப்படுத்த வேண்டும்.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெற்றது. அக்டோபர் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்தார் மல்லிகார்ஜூன கார்கே




காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட மல்லிகார்ஜூன கார்கே வேட்புமனுத்தாக்கல் செய்தார். 







 

பொறியியல் கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

ஆயுதபூஜையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை - அண்ணா பல்கலைகழகம்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்தார் சசிதரூர்..!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட சசிதரூர் வேட்புமனுத்தாக்கல் செய்தார். 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை. ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் எஸ்.முரளீதர்

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.முரளீதரை நியமிக்க கொலிஜயம் பரிந்துரை செய்துள்ளது. ஒடிசா ஐகோர்ட் தலைமை நீதிபதியான எஸ்.முரளீதரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை

வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர்..!

காந்திநகர் - மும்பை இடையேயான புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். 

ஆயுதபூஜை விடுமுறை - சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

ஆயுத பூஜைக்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட உள்ளது. 

முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக அனில் சவுகான் இன்று பொறுப்பேற்பு

நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக அனில் சவுகான் இன்று பொறுப்பேற்க உள்ளார். 

காஞ்சிபுரம் சிலிண்டர் விபத்து உயிரிழப்பு 3ஆக உயர்வு..!

காஞ்சிபுரம் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டின் 3வது வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்..!

நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று குஜராத்தில் தொடங்கி வைக்கிறார். 

Background

சென்னையில் 132ஆவது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு  நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.  இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 132ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர்.30) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.









கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.