Breaking LIVE: திமுக உட்கட்சி தேர்தல் - வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது
Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
தருமபுரி மாவட்டம் நகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் இரண்டு அடுக்கு மாடியில் இரண்டாவது அடுக்கு குடியிருப்பு இருந்து பீரோ இறக்கும்போது அருகில் இருந்த மின்சார வயர் பீரோவில் உரசியத்தில் உயிர் இழந்தவர்கள் மூன்று பேர் 1.இலியாஸ் பாஷா,(75) 2.கோபி(23) பச்சையப்பன்(57) இந்த மூன்று பேரும் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது. குமாா் ஆபத்தான நிலையில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைப்பு விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் காவல் துறை சம்பவ இடத்திற்கு விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது.
தமிழ்நாட்டில் மாற்றுப் பணியில் உள்ள 182 ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை, அரும்பாக்கம் நிதி நிறுவன கொள்ளை வழக்கில் கைதான 6 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
மருத்துவம் மற்றும் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பதிவு பெற்ற பரம்பரை மருத்துவர்களுக்கான முதியோர் ஓய்வூதியத் தொகை உயர்த்தி வழங்குவதற்கான ஆணையினை பயனாளிகளுக்கு இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமை செயலகத்தில் வழங்குகிறார்கள்.
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் திருச்செந்தூர் - பாலக்காடு - திருச்செந்தூர் ரயில்கள் சாத்தூர் வரை இயக்கப்பட்டு பகுதியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தப் பணிகள் நடைபெற தாமதமாகிறது. எனவே இன்று செப்டம்பர் 22 அன்று பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் (16731) மற்றும் திருச்செந்தூர் - பாலக்காடு ரயில் (16732) ஆகியவை வழக்கம்போல் இயங்கும்
கோவை கரும்புக்கடை பகுதியில் PFI தேசிய செயற் குழு உறுப்பினர் இஸ்மாயில் என்பவரது வீட்டில் தேசியப் புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவிலில் அருகே உள்ள ஆலை ஒன்றில் புகுந்து மிரட்டியதாக தாம்பரம் திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர். ராஜா மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூரில் தனது 15 வயது மகளுக்கு கடந்தாண்டு திருமணம் செய்து வைத்த தீட்சிதர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்தில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகிறது.
Background
சென்னையில் 124ஆவது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 124ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர்.22) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -