இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல நாளை (நவ.29) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Continues below advertisement

6 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும்,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஃபெங்கல் புயல் எப்போது?

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில்  வடக்கு- வடமேற்கு திசையில்  இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும். அதன் பிறகு, மேலும் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை  கடலோரப்பகுதிகளில், காரைக்காலிற்கும்– மகாபலிபுரத்திற்கும் இடையே 30ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

28ஆம் தேதி மாலை முதல் 29-ஆம் தேதி காலை வரை  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும்பொழுது புயலாக வலுப்பெற்று காற்றின் வேகம் மணிக்கு 65 முதல் 75  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்தில்  வீச வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறி உள்ளது.