Breaking LIVE :முதலமைச்சர் மு.க.ஸடாலினிடம் வாழ்த்து பெற்ற தமிழ்நாடு கிரிக்கெட் சங்க புதிய தலைவர்

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.

ABP NADU Last Updated: 05 Nov 2022 10:02 PM
முதலமைச்சர் மு.க.ஸடாலினிடம் வாழ்த்து பெற்ற தமிழ்நாடு கிரிக்கெட் சங்க புதிய தலைவர்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக தேர்வாகியுள்ள அமைச்சர் பொன்முடியின் மகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சென்னையில் கனமழை...!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்து வருகிறது.

ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் - தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட காங்கிரஸ்

ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. 

விதிமீறல் கட்டிடம் மீது நடவடிக்கை எடுக்காது ஏன்..? நீதிமன்றம் கேள்வி

விதிமீறல் கட்டிடம் மீது நடவடிக்கை எடுக்காமல் கும்பகர்ணன் போல் தூங்கிக்கொண்டிருப்பது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

பிளாஸ்டிக் பாட்டிலில் மது விற்பனை செய்யும் திட்டமில்லை - உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக்

பிளாஸ்டிக் பாட்டிலில் மது விற்பனை செய்யும் திட்டம் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தென் மேற்கு வங்கக்கடலில் பகுதியில் வரும் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவும் வாய்ப்பு

தென் மேற்கு வங்கக்கடலில் பகுதியில் வரும் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவும் வாய்ப்பு

தமிழ்நாட்டில் நாளை நடைபெறவிருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணி ஒத்திவைக்கப்படுவதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அறிவிப்பு...

தமிழ்நாட்டில் நாளை நடைபெறவிருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணி ஒத்திவைக்கப்படுவதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அறிவிப்பு...

RSS Rally Postponed : தமிழ்நாட்டில் நாளை நடைபெறவிருந்த பேரணி ஒத்திவைக்கப்படுவதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தமிழ்நாட்டில் நாளை நடைபெறவிருந்த பேரணி ஒத்திவைக்கப்படுவதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

நள்ளிரவு வீசிய சூறைக்காற்று..ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 10-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம்

நள்ளிரவு வீசிய சூறைக்காற்று..ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 10-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம்

Chandrababu Naidu : ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கான்வாய் மீது, நந்திகாமா பகுதியில் கல்வீசி தாக்குதல்

Chandrababu Naidu : ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கான்வாய் மீது, நந்திகாமா பகுதியில் கல்வீசி தாக்குதல். விசாரணை துவக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது

சென்னையில் இன்று 200 வார்டுகளில் மருத்துவ முகாம்..!

சென்னையில் இன்று 200 வார்டுகளில் மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. 

இன்று முதல் டெல்லியில் கால வரையறை இன்றி தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை!

டெல்லியில் கால வரையறை இன்றி தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

யு.ஜி.சி. நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!

யு.ஜி.சி. நெட் தேர்வின் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத அமர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

இன்று 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் - சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும், மேலும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனி வழக்கு..!

சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் இந்திய அணியின் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தோனி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார். அதில், சிவில் வழக்கு தாக்கல் செய்த மனுவில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற ஆணைக்கு களங்கம் விளைவித்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. 

Background

Petrol, Diesel Price :  தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 168வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 







சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 150 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.






கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.









இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..? 


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025 ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.