Breaking LIVE : ”மழை எதிரொலியால் தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது”
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.
மழை காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
"பாஜகவில் வரலாறு தெரியாதவர்கள் பதவியில் உள்ளனர்; இந்தியை எதிர்த்து சட்டத்தை எரித்த 10 எம்.எல்.ஏ க்களை எம்.ஜி.ஆர் பதவி நீக்கம் செய்தார்" திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தெரிவித்தார்.
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, கள்ளக்குறிச்சி, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், தஞ்சாவூர், கரூர், சேலம், ஈரோடு, தர்மபுரி, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்குநர் அட்லி இயக்கி வரும் ஜவான் படததின் கதை நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பேரரசு படத்தின் கதை என்று புகார் எழுந்துள்ளது.
மாவீரன் திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தம்.படத்தின் சில காட்சிகளை மாற்றச் சொன்னதால், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் அஸ்வினுக்கு இடையே கருத்து வேறுபாடு என தகவல்
சென்னையில் நடைபெறும் இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் ஆண்டு விழாவில் கலந்துகொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நவ.12ம் தேதி தமிழ்நாடு வருகை தரவுள்ளார்.
"காப்பீட்டு நிறுவனங்களின் உழவர்களை சுரண்டுவதையே நோக்கமாக கொண்டிரக்கிருப்பதால் அவற்றிடமிருந்து நீதியையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்க முடியாது" என்று பாஜக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
"காவல் துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தலாம்; கோவை,பொள்ளாச்சி,மேட்டுப்பாளையம், பல்லடம்,அருமனை,நாகர்கோவில் நாங்குனேரி தவிர மற்ற இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதிக்கலாம்" என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் இசுதான் காத்வி - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் வருகிற 7 மற்றும் 8 ஆகிய தினங்களில் பௌர்ணமி வர இருப்பதாலும் 7ம்தேதி அன்று அண்ணா அபிஷேகம் நடைபெறுவதால் அன்று பிற்பகல் 3 மணிமுதல் 6 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என்றும் 6 மணிக்குமேல் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அண்ணாமலையார் கோவிலில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தகவல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காற்று மாசுவை குறைக்க 50% ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
பாசனத்திற்காக மணிமுக்தா அணையிலிருந்து அமைச்சர் வேலு தண்ணீட் திறந்து வைத்தார்.
நீலகிரி, கோவை, திருப்பூர், நெல்லை, தென்காசி, குமரி, தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
பழனி அருகே பட்டியலின மக்கள் செல்வ விநாயகர், உச்சி காளியம்மன் கோயிலில் வழிபட உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்துள்ளது.
ஃபிபா உலகக் கோப்பை தொடரில் பாலின விகிதத்தை சமநிலை படுத்தும் முயற்சியில் பெண் நடுவர்களை களமிறக்க ஃபிபா முயற்சி செய்துள்ளது. 2022 உலகக் கோப்பையில் ஆறு பெண் நடுவர்கள் இடம்பெறுவார்கள் என்றும், அவர்களில் மூன்று பேர் உதவி நடுவர்களாக இருப்பார்கள் என்றும், இது ஒரு பெரிய சர்வதேச விளையாட்டில் முதல் முறையாகும் என்று ஃபிபா தெரிவித்துள்ளது.
யு.ஜி.சி. நெட் தேர்வின் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத அமர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எல்லோரும் எதிர்பார்த்து வந்த நிலையில், நவம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படும் என்று யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார்.
தேர்வர்கள் www.nta.ac.in என்ற இணைய தளத்துக்குச் சென்று, அதில் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவிட்டு, நெட் தேர்வு முடிவுகளைக் காணலாம்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலம் முழுவதும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 14138 ஏரிகளில் 2,377 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்று நீர்வளத் துறை தெரிவித்துள்ளது
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 72 குறைந்து ரூ.37,648 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 9 குறைந்து ரூ.4,706 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 40,864 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ.5,108 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு ரூ 12 உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் கோதண்டராம நகரில் வீடு தீப்பற்றி இருவர் உயிரிழப்பு. ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் இருவர் படுகாயம் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் கே வி டெக்ஸ் ஜவுளிக்கடை உள்ளது. இந்த ஜவுளிக்கடையில் 3 வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்ற்னர்.
10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்ற்னர். இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகின்றது. இதனால் 3 வது நாளாக வரிமான வரித்துறை சோதனை நடைபெறுகின்றது எனவும் கடையின் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் யாரும் கடைக்குள் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிகின்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(4.11.2022) பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி, ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு (04.11.2022) மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்
கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்
Background
Petrol, Diesel Price : தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 167வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.
இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..?
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025 ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -