Breaking LIVE : மெரினா கடற்கரையில் பேருந்து மோதியதில் கர்ப்பிணி பெண் சம்பவ இடத்திலே மரணம்
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.
மெரினா கடற்கரை சாலையில் கடற்படைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் கடற்படை அதிகாரியின் கர்ப்பிணி மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பா நெற்பயிறை காப்பீடு செய்ய நவம்பர் 21ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு செய்து உழவர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு மருத்துவ கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்குவதை நிறுத்தி வைத்திட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாளை குரூப் 1 தேர்வு நடைபெறுவதால் நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம்
புதுக்கோட்டை கிள்ளனூரில் திருடியதாக தாக்கப்பட்ட சிறுமி உயிரிழந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூரில் கழிவுநீர் தொட்டியில் நச்சுவாயு தாக்கி 4 பேர் இறந்த நிலையில் கட்டடத்தை இடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ராமேஸ்வரத்தில் இன்று மாலை 4.20 க்கு புறப்பட வேண்டிய திருப்பதி விரைவு ரயில் இரவு 11.30க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வருகிற 21, 22, 23 ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தமிழ் பாட தேர்வு ரத்து செய்யப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2ம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நடந்த செமஸ்டர் தேர்வு வினாத்தாளை மாற்றி வழங்கியதால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குபிரிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சந்தேக மரணம் என்ற பிரிவை மாற்றி கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என தற்போது வழக்கு பதிந்துள்ளனர். மேலும், சட்டவல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று கைது நடவடிக்கை தொடங்கும் என பெரவள்ளூர் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.
அடுத்த 3 மணி நேரத்திற்குல் பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அகமதாபாத்தில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து. உணவு தயாரிக்கும்பெட்டியில் இருந்து புகை வருவதை கண்டு பயணிகள் எச்சரித்தையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது; தமிழ்நாட்டில் நாளை முதல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை (நவம்பர் 19ஆம் தேதி ) தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேற்கு வங்க ஆளுநராக டாக்டர் சி.வி ஆனந்த போஸை நியமித்து குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
Background
Petrol, Diesel Price : தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 181வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.
இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..?
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -