Breaking News Tamil LIVE: துபாய் எக்ஸ்போ 2022 : தமிழக அரங்கைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..
Breaking News Tamil LIVE Updates: இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
தமிழகத்தில் இன்று ஒருநாளில் 37 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..
விருதுநகர் வன்கொடுமை : பாதிக்கப்பட்ட பட்டியலின பெண்ணிடம் விசாரணை நிறைவு செய்தது சிபிசிஐடி..
மீண்டும் யோகி: முதல்வராக பதவியேற்றார் ஆதித்யநாத்.. பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் ஆனந்தி பென் படேல்
பெருநகர சென்னை மாநகராட்சியில் வழங்கப்பட்ட கட்டட அனுமதியின் அடிப்படையில் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என்றும், விதிமுறைகள் மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மூடி சீல் வைக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து அமைச்சர் பதில் அளிக்க மறுத்ததால் மக்களவையில் இருந்து திமுக, காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்
அரசு பேருந்துகள் நின்று செல்ல விண்ணபிக்கும் உணவுகளுக்கான நிபந்தனைகளில் இருந்து சைவ உணவு என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏப்ரல் 6 முதல் மானியக் கோரிக்கை எடுத்துக் கொள்ளப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை, கிராமுக்கு 31 ரூபாய் உயர்ந்து 4,854 ரூபாய்க்கும், சவரனுக்கு 248 ரூபாய் உயர்ந்து 38,832 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1,685 ஆக உள்ளது. நேற்று 1,778 ஆக இருந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது.
சிதம்பரத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. போராட்டங்களை தவிர்க்க ஒரு மாதம் சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கோட்டாட்சியர் ரவி உத்தரவிட்டிருந்தார். பொதுமக்கள் நலன் கருதி தற்போது 144 தடை உத்தரவு வாபஸ் பெறுவதாக கோட்டாட்சியர் ரவி தெரிவித்துள்ளார்.
துபாய் சென்றிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், துபாய்க்கான இந்திய தூதர் உள்ளிட்ட முக்கிய பிரமூகர்களுடன் சந்தித்தார். துபாய் சர்வதேச எக்ஸ்போவில் தமிழ் அரங்கை இன்று முதலமைச்சர் திறந்து வைக்கிறார்
தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கணிப்பு
உத்திரப்பிரதேச முதலமைச்சர் இன்று யோகி ஆதியநாத் பதவி ஏற்கிறார். பிரதமர் மோடி, பாஜக கட்சி முக்கிய தலைவர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு
ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் 140 நாடுகளுடன் நிறைவேறியது. இந்தியா உள்ளிட்ட 38 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை
இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.103.67க்கு விற்பனையாகிறது. டீசல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.93.71-க்கு விற்பனையாகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக ஜடேஜாவை தேர்வு செய்து அறிவித்திருக்கிறது அந்த அணி நிர்வாகம். “தோனி இருக்கும்போது எனக்கு கவலையில்லை” என கேப்டன் பொறுப்பை ஏற்றது பற்றி ஜடேஜா தெரிவித்திருக்கிறார்
Background
சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 137 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் 23-ம் தேதி உயர்ந்தது. அதனை அடுத்து, நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 102.91க்கு விற்பனையானது. டீசல் ஒரு லிட்டருக்கு 92.95 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.103.67க்கு விற்பனையாகிறது. டீசல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.93.71-க்கு விற்பனையாகிறது.
முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். பெட்ரோல், டீசல் விலையை நான்கு மாதங்களுக்கும் மேலாக சீராக வைத்திருந்து நஷ்டத்தை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருவதால், இந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -