Breaking LIVE: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு : வன்முறை குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை

Breaking Live :தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 21 Jul 2022 04:41 PM
இலங்கையின் புதிய அதிபராக பதிவியேற்றார் ரணில் விக்கரமசிங்கே

134 எம்.பி.க்களின் ஆதரவுடன் இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கரமசிங்கே பதிவியேற்றார்





வேதாந்தா விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய விண்ணப்பத்தை தமிழக சுற்றுச்சூழல் துறை செயலர் 3 மாதத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க உத்தரவு.

செஸ் ஒலிம்பியாட் : மாமல்லபுரத்திற்கு இலவச பேருந்து

செஸ் ஒலிம்பியாட் தொடரையொட்டி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் 5 பேருந்துகள் இலவசமாக இயக்கப்பட உள்ளன

கள்ளக்குறிச்சி : சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் காவல்துறை சிறப்பு புலனாய்வு குழு நேரில் விசாரணை. சேலம் டிஐஜி பிரவீன் குமார் அபிநபு தலைமையிலான காவல் அதிகாரிகள் ஆய்வு. பள்ளியில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு காட்சிகள் பதிவி செய்யப்படுகின்றன.

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு : வன்முறை குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு : வன்முறை குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்றோர் வாங்கவில்லை

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடலை பெற்றோர் வாங்கவில்லை என அரசு தரப்பில் முறையீடு 

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பதில் கடிதம்

நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் உட்கட்சி பிரச்சனை இருப்பதை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அதிமுகவின் எம்பியாக கருத வேண்டாம் - ஈபிஎஸ்

அதிமுகவில் ஒரே ஒரு எம்.பி இருந்த நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவிற்கு ஈபிஎஸ் கடிதம். ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அதிமுகவின் எம்.பியாக கருத வேண்டாம். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் -  ஈபிஎஸ்

கருமுட்டை : ஸ்கேன் செண்டர் சீலை அகற்ற உத்தரவு

சிறுமி கருமுட்டை வழக்கில் சுதா மருத்துவமணை ஸ்கேன் மையத்திற்கு வைத்த சீலை அகற்ற ஜகோர்ட் உத்தரவு.

ஜெயலலிதா சிலையையும் காணவில்லை என தகவல்

அதிமுக அலுவலகத்தின் சீல் திறக்கப்பட்ட நிலையில், உள்ளே இருந்த பொருட்கள் மாயம். ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட செங்கோல், வெள்ளியில் வழங்கப்பட்ட பொருட்கள் மற்றும் ஜெ.வின் சிலை காணவில்லை என தகவல். 2 -ஆவது தளத்தில் இருந்த விலை உயர்ந்த பொருட்களும் மாயம்.

மாணவி உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர்கள் சம்மதம் என தகவல்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடலை மதியம் 2 மணிக்குள் பெற்றுக்கொள்ள பெற்றோர்கள் சம்மதம் என தகவல்.

உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக மாணவியின் தந்தைக்கு அறிவுறுத்தல். உயர்நீதிமன்றம் நியமித்துள்ள மருத்துவர்களை எப்படி குறை கூற முடியும் என்று நீதிபதிகள் கேள்வி.

கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தையிடம் நீதிபதிகள் கேள்வி

நீங்கள் கூறும் மருத்துவர்களை ஏன் நியமிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கேள்வி.

ஆளுநருடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்திப்பு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.

கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை மனு தள்ளுபடி

கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். மாணவியின் உடற்கூராய்வு குறித்த தகவலை உரிய நேரத்தில் பெற்றோருக்கு கொடுத்தாக தமிழக அரசு வாதம்.

அதிமுக அலுவலகம் ஈபிஎஸ் வசம்

அதிமுக அலுவலக சீல் அகற்றப்பட்ட நிலையில், ஈபிஸ் தரப்பினருக்கு மேலாளர்கள் அலுவலக சாவியை வழங்கினர்.

அதிமுக அலுவலக சீல் அகற்றம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீல் அகற்றம். ஜூலை 11 ஆம் தேதி சீல் வைக்கப்பட்ட நிலையில், 10 நாட்களுக்கு பிறகு சீல் அகற்றப்பட்டுள்ளது.

குழந்தைகள் நல ஆணையர் கள்ளக்குறிச்சி வந்தடைந்தனர்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக, மாநில குழந்தை பாதுகாப்பு மற்றும் உரிமை ஆணைய தலைவர் சரஸ்வதி தலைமையிலான குழுவினர் கள்ளக்குறிச்சி வந்தடைந்தனர், மேலும் ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினர்

ஆவின் பொருட்கள் விலை உயர்வு

100 கிராம் தயிர் 10 ரூபாயிலிருந்து 12 ரூபாயாக உயர்வு. 200 கிராம் தயிர் 25 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக உயர்வு . பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரை லிட்டர் தயிர் 30 ரூபாயிலிருந்து 35 ரூபாயாக உயர்வு. பிரிமியம் தயிர் 1 லிட்டர் 100 ரூபாயிலிருந்து 120 ரூபாயாக உயர்வு.

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது, அதன் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவி உடலை ஒப்படைப்பதற்கான ஆயுத்தப் பணிகள்

கள்ளக்குறிச்சி மாணவி உடலை பெற்றோர்களிடம் ஒப்படைப்பதற்கான ஆயுத்தப் பணிகள் மேற்கொள்ளும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக 2 வஜ்ரா வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. 

இலங்கை அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்க

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கையில் புதிய அதிபராக இன்று ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றுள்ளார். 

Breaking LIVE: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் டெல்லி பயணம்

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Breaking LIVE: ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Breaking LIVE: ரயில்வே துறைக்கு 260 கோடி ரூபாய் இழப்பு- மத்திய அமைச்சர் தகவல்

ரயில்வே துறைக்கு தற்போது வரை 260 கோடி ரூபாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல்.

Breaking LIVE: அமலாக்கத்துறை விசாரணைக்கு சோனியா காந்தி இன்று ஆஜர்

அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜராகிறார்.

Breaking LIVE: பலத்த பாதுகாப்பு உடன் அதிமுக அலுவலகம் இன்று திறப்பு

அதிமுக அலுவகத்திற்கு சீல் வைக்கப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை தொடர்ந்து அதிமுக அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது.

Breaking LIVE: இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 11 மணி முதல் எண்ணப்பட உள்ளன.

Background

சென்னையில் 61வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. 


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு  நவம்பர் 4 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43 க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் இதன் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் போர் உள்ளிட்ட பல காரணங்களால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது. இதனால் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் விலையை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.


இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 60வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. 

 

அதன்படி இன்று ( ஜூலை 20) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது. தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து 2 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.