Breaking LIVE: அதிமுக துணை பொதுச் செயலாளர்கள் நியமனம்
Breaking Live :தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
ABP NADU
Last Updated:
13 Jul 2022 06:57 PM
அதிமுக துணை பொதுச் செயலாளர்கள் நியமனம்
அதிமுக துணை பொதுச் செயலாளர்களாக முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி
75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பாடும் நிலையில் 75 நாட்களுக்கு 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அளிக்க முடிவு செய்துள்ளது மத்திய சுகாதாரத்துறை.
வாக்கி டாக்கி ஊழல் - விரிவான விசாரணை
மீனவர்களுக்கு வாக்கி டாக்கி தந்ததில் ரூ.35.72 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக 144 ஆவணங்கள் கிடைத்துள்ளன. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான புகாரில் விரிவான விசாரணை நடந்து வருகிறது : லஞ்ச ஒழிப்புத்துறை
ஓப்போ நிறுவனம் ரூ.4,389 கோடி வரி ஏய்ப்பு
ஓப்போ இந்திய நிறுவனம் ரூ.4,389 கோடி சுங்கவரி ஏய்ப்பு செய்ததாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கண்டுபிடிப்பு
பழனிச்சாமி 4 ஆண்டுகள் கொள்ளையடித்தது அம்பலம் - புகழேந்தி
பழனிச்சாமியும் அவரது தரப்பினரும் 4 ஆண்டுகள் கொள்ளையடித்ததை பொன்னையன் அம்பலபடுத்தி விட்டார் - புகழேந்தி
நான் ஏற்கனவே பொதுச்செயலாளர்தான் : சசிகலா
நான் ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர்தான்; அவர்கள்தான் சண்டை போடுகிறார்கள். ஒருவருக்கொருவர் சண்டையிட்டு அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது : சசிகலா
PM Inaugrates Chess Olympiad : செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க, ஜூலை 28-ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி
செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க, ஜூலை 28-ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி
அதிமுக பொதுக்குழு முடிவுகள் ஆணையத்தில் தாக்கல்
ஜூலை 11 ஆம் தேதி நடைப்பெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் சி.வி. சண்முகம் தாக்கல் செய்தார்.இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு உட்பட்ட 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
Breaking LIVE: 17ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்?
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக 17 ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்.
மாநில கல்வி கொள்கை : மக்களிடம் கருத்து கேட்க முடிவு
தமிழ்நாட்டை 8 மண்டலங்களாக பிரித்து மாநிலம் முழுவதும் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்த குழு திட்டம்
சுஷாந்துக்கு போதைப்பொருள்.. ரியா சக்ரவர்த்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த என்சிபி!
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு நடிகை ரியா சக்ரவர்த்தி தன் சகோதரர் மூலம் போதைப்பொருள் வழங்கியுள்ளதாக என்சிபி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ரியா சக்ரவர்த்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் : எப்போது விசாரணை ?
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய வழக்கு தலைமை நீதிபதி ஒப்புதலுக்கு பின்பே ஈபிஎஸ், ஓபிஎஸ் மனுக்கள் விசாரிக்கப்படும்.
Breaking live : CBSE +2 ரிசல்ட் வெளியாக மேலும் ஒருமாதம் ஆகலாம்
சி.பி.எஸ்.இ +2 தேர்வு முடிவு வெளியாக மேலும் ஒரு மாதம் ஆகலாம் என்ற தகவல் வெளியாகிவுள்ளது
Breaking LIVE: நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் 4 தாலுகாவிலுள்ள பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
Breaking LIVE: மகாராஷ்டிராவில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Breaking LIVE: ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பு... ஆகஸ்ட் 1ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம்
ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பு தொடர்பாக ஆகஸ்ட் 1ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு.
Breaking LIVE: 105 கன ஆடியை தாண்டிய மேட்டூர் அணை
கனமழை காரணமாக காவிரியிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியை தாண்டியுள்ளது.
Breaking LIVE: ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Breaking LIVE: கடலூரில் 25 மீன்வர்களுக்கு சலுகைகள் ரத்து
கடலூர் மாவட்டத்தில் 25 மீனவர்களுக்கு சலுகை ரத்து என்று மீன்வளத்துறை அறிவிப்பு.
Breaking LIVE: 18ஆம் தேதி அரசு மற்றும் உதவி பெறும் கலை கல்லூரிகள் திறப்பு
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுரிகள் வரும் 18ஆம் தேதி விடுமுறைக்கு பிறகு திறக்கப்படும் என்று அறிவிப்பு.
Background
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நேற்று காலை ஓபிஎஸ் சென்றார். அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர் மீது இபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. மேலும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் ஆதரவாளர்களை தாக்கினர்.
அதிமுக அலுவலகம் அருகே தொண்டர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இருதரப்பினரும் எதிர் எதிரே நின்றுக்கொண்டு கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது, கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
கல்வீச்சு, மோதலுக்கு பின் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் அதிமுக தலைமை அலுவலகம் வந்தது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் ஆதரவாளர்களை விரட்டியடித்தனர். இதனால், அந்த பகுதி போர்களம் போல காட்சியளித்தது. அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் படங்கள் கிழித்து, தீ வைத்து எரிக்கப்பட்டன. காவல்துறையினர் உள்ளிட்ட பலர் காயம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.மேலும், அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதுசம்பந்தமாக மனுத்தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்திருந்த நிலையில், இன்று பிற்பகல், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் இதே பிரச்னை தொடர்பாக முறையீடு செய்யப்பட்டது.
அதேபோல, வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து, சீலை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும், தாங்கள் தான் உண்மையான அதிமுக எனவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த முறையீட்டை கேட்ட நீதிபதி சதீஷ்குமார், மனுத்தாக்கல் நடைமுறை முடிந்தால் நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.