Breaking LIVE: பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு; கனல் கண்ணனின்  ஜாமீன் மனு தள்ளுபடி

இன்றைய தினத்தின் செய்திகள் உடனுக்குடன்...

ABP NADU Last Updated: 25 Aug 2022 07:56 PM
பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசியதாக வழக்கு; கனல் கண்ணனின்  ஜாமீன் மனு தள்ளுபடி

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட  வழக்கில், சினிமா 'ஸ்டன்ட் மாஸ்டர்' கனல் கண்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Manikandan Arrest : காவல்துறை சீருடைகள் திண்டுக்கல்லில் சுற்றித்திரிந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் மணிகண்டன் கைது

காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாநகர் மாவட்டத் தலைவராக இருப்பவர் துரை. மணிகண்டன். கடந்த சில நாள்களுக்கு முன்பு திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு அனுமதி கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவிக்காத போதிலும் கூட, விலைவாசி உயர்வுக்கு எதிராக பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். 



இந்நிலையில், காவல் ஆய்வாளர் சீருடையுடன் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் நகரில் வலம் வந்து கொண்டிருந்தார்.  இதனை அறிந்த திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

2022 தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு; தமிழகத்தில் விருது பெறுபவர் ராமச்சந்திரன் என்னும் ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர்

 2022 தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு; தமிழகத்தில் விருது பெறுபவர் ராமச்சந்திரன் என்னும் ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர்

Edible Oil: சமையல் எண்ணெய்.. புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு.. என்னென்ன தெரியுமா?

உணவு பயன்பாட்டிற்கு எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுடைய எண்ணெய் அளவை வெப்பநிலை இல்லாமல் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் புதிய உத்தரவை வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதிக்குள் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பணியாளர்களுக்கான உகந்த சூழ்நிலையை உருவாக்க மத்திய அரசு செயல்பட்டு வருகிறது - பிரதமர் மோடி

பணியாளர்களுக்கான உகந்த சூழ்நிலையை உருவாக்க மத்திய அரசு செயல்பட்டு வருகிறது - பிரதமர் மோடி

5G Services : இந்தியாவில் 5ஜி சேவைகள் அக்டோபர் மாதம் 12 தேதி முதல் தொடங்குகிறது - மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அறிவிப்பு

5G Services : இந்தியாவில் 5ஜி சேவைகள் அக்டோபர் மாதம் 12 தேதி முதல் தொடங்குகிறது - மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அறிவிப்பு

அமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கு; 2 பெண்களுக்கு ஜாமீன்

தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசிய வழக்கில், 3 பெண்களில் 2 பெண்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதிமுக பொதுக்குழு தொடர்பான ஈ.பி.எஸ். தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

 அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை, தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது

ஈ.பி.எஸ். மேல்முறையீடு வழக்கு- ஓ.பன்னீர்செல்வம் வாதம் தொடங்கியது!

அடிப்படை உறுப்பினர்களை விட, பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என் வாதத்தை ஏற்க முடியாது ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமனறத்தில் கருத்து. 

ஓ.பி.எஸ். உடன் இணைந்து செயல்பட முடியாது - இ.பி.எஸ். தரப்பு

ஓ,பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவது இனி நடக்காது. தனி நீதிபதி உத்தரவால் அதிமுக செயல்பட முடியாத நிலை ஏற்படும். இருவரும் இணைந்து செயல்பட முன்வர மாட்டார்கள் என்பதால் கட்சி நடவடிக்கைள் முடங்கிவிடும்
எனவும் உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் 


 

பொதுக்குழு தொடர்பாக தனிநீதிபதி தீர்ப்புக்கு எதிரான ஈ.பி.எஸ். தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை தொடக்கம்!

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக தனிநீதிபதி தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசா,மி தொடர்ந்த வழக்கில் இறுதி விசாணை சென்னை உயர்நீதிமன்றைத்தில் தொடங்கியது.  எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மனி மீக்து நீதிபதிகள் எம்.துரைசாமி சுந்தர் மோகன் அமர்பு முன்பாக விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. 


எடப்பாடி பழனிசாமி  சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆடியமா சுந்தர,. சி.எஸ். வைதியநாதன் விஜய் நாராயணன் ஆஜராகி உள்ளனர். அனைத்து தரப்பினருக்கும் தலா ஒரு மணி நேரம் வாதம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் நிறுவனத்தின் மனு தள்ளுபடி!

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் நிறுவனங்களின் தனிநபர் பாதுகாப்பு கொள்கை பற்றி விசாரிக்க இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து மனு அளித்த வாட்ஸ் அப், ஃபேஸ்புக் நிறுவனங்களின் மனுக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கர்நாடகா : ஜீப்புடன் லாரி மோதி கொடூர விபத்து - 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு

கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தின் சிரா அருகே லாரி மீது ஜீப் மோதிய விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். கூலி தொழிலாளர்கள் பெங்களூருக்கு ஜீப்பில் வந்தபோது தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர். அதிகாலை 4 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியார் பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு! மறு கூட்டல் விவரம் இதுதான்!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் இளநிலை இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு, முதுநிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. www.periyaruniversity.ac.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மறுமதிப்பீடு, மறு கூட்டல், விடைத்தாள் நகலை பெற செப்டம்பர் 9க்குள் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வு..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 அதிகரித்து ரூ. 38, 640 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

உக்ரைன் ரயில் நிலையத்தில் தாக்குதல் : 22 பேர் பலி என தகவல்

உக்ரைனில் டினிப்பெட்ரோவ்ஸ்க் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷ்ய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 22 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் 50 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் அதிபர் செலன்ஸ் தகவல் தெரிவித்துள்ளார். 

Background

சென்னையில் 96வது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று ( ஆகஸ்ட்.25) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது. 


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு  நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது.அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது. தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து 3 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.