Breaking LIVE: ஏபிவிபி மாணவர்களுக்கும், ஜே.என்.யூ பல்கலைக்கழக பணியாளர்களுக்கும் இடையே மோதல்

இன்றைய தினத்தின் செய்திகள் உடனுக்குடன்...

இரவாதன் Last Updated: 22 Aug 2022 07:29 PM
JNU Students Staff Clash : ஏபிவிபி மாணவர்களுக்கும், பல்கலைக்கழக பணியாளர்களுக்கும் இடையே மோதல்

JNU Students Staff Clash : ஏபிவிபி மாணவர்களுக்கும், பல்கலைக்கழக பணியாளர்களுக்கும் இடையே மோதல்

விடுதியில் பி.டெக் மாணவன் தற்கொலை

விடுதி அறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் - போலீசார் விசாரணை


வயிற்று வலி காரணமாக மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது

அந்நிய மரக்கன்றுகளை விற்க தடைவிதிக்க வேண்டும்; சென்னை உயர் நீதிமன்றம்

அந்நிய மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சரி பண்ணைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமனறம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வனப்பகுதியில் அந்நிய மரக்கன்றுகளை நீக்க கோரிய வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு. மேலும் இந்த தடையை அறிவிப்பாணையாக வெளியிடவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை மழைநீர் வடிகால் பணியில்  தாமதம் ஏன்?

மரங்கள், மின்கம்பங்களால் சென்னையில் மழைநீர் கால்வாய் அடைக்கும் பணிகள் தாமதமாகின்றன.


சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர்க்குள்  80% நிறைவுபெறும் என எதிர்பார்ப்பு - அமைச்சர் கே.என்.நேரு

கோவை தம்பி மகன் மறைவு 

மதர்லேண்ட் பிக்சர்ஸ் உரிமையாளராக கோவை தம்பியின் மகன் மோகந்துரை காலமானார்

திருமஞ்சனத்திற்கான கட்டணம் - கோர்ட் உத்தரவு

பழனி முருகன் கோவிலில் திருமஞ்சனத்திற்கான கட்டணத்தை பெறுவதற்கு பண்டாரங்களே தகுதியானவர்கள். தொடக்கம் முதலே பண்டாரங்களே திருமஞ்சனத்திற்கான நீரை எடுத்து வருவதாக அனைத்து ஆவணங்களும் உறுதிப்படுத்துகின்றன் - உயர்நீதிமன்ற கிளை

பொதுக்குழு தொடர்பான ஈபிஎஸ் மனு - நாளை விசாரணை

பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனுவை பட்டியலிட ஈபிஎஸ் கோரியுள்ளார்.


அதிமுக பொதுக்குழு தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் கூடுதல் மனுவை நாளை விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள்  உத்தரவு 

ஈபிஎஸ் மனு நாளை விசாரணை

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற  தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் தொடுத்த மேல்முறையீடு வழக்கு நாளை விசாரணை 

ஆகம விதி உள்ள கோயிலில்  அர்ச்சகரை நியமிக்க முடியாது

ஆகம விதிகள் பின்பற்றப்படும் கோயில்களில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை அரசு நியமிக்க முடியாது.  ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு  உத்தரவு 


கோயில்கள் எந்த ஆகம விதிகளை பின்பற்றுகின்றன என்பதை கண்டறிய 5 பேர் குழு நியமிக்க உத்தரவு 

3 பேருக்கு கலைஞர் செம்மொழி விருது

3 பேருக்கு கலைஞர் செம்மொழி தமிழ் விருதுகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்குகிறார். முனைவர்கள். ம. ராஜேந்திரன், க. நெடுஞ்செழியன் மற்றும் ழான் லூயிக் ஆகியோருக்கு வழங்கப்பட இருக்கிறது. 

சென்னை தினத்தை முன்னிட்டு ஆளுநர் ரவி வாழ்த்து

’’சென்னையின் செழுமையான கலாச்சாரம், ஆன்மீகம், துடிப்பான புலமை ஆகியவற்றின் நீண்ட வரலாறு அனைத்து மக்களையும் ஈர்த்தது மற்றும் ஊக்கப்படுத்தியது’’ - சென்னை தினத்தை முன்னிட்டு ஆளுநர் ரவி வாழ்த்து

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் -  www.tnpsc.gov.in / www.tnpscexams.in என்ற  இணையதள பக்கதிற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்

பல்வேறு இடங்களின் இரவெல்லாம் மழை

சென்னையின் பல்வேறு இடங்களின் இரவெல்லாம் மழை -சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய நீர்

ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் 9 பாகிஸ்தான் வீரர்கள் பலி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 500 அடி செங்குத்தான பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் 9 பாகிஸ்தான் வீரர்கள் பலி

2,665 கட்டிடங்களுக்கான கட்டுமான பணியை நிறுத்த நோட்டீஸ்

சென்னையில் விதி மீறி கட்டப்பட்ட 2,665 கட்டிடங்களுக்கான கட்டுமான பணியை நிறுத்த நோட்டீஸ் : மாநகராட்சி நடவடிக்கை

3 நாட்களுக்கு கனமழை பெய்யும்

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம்

உடற்பயிற்சி மிகவும் அவசியம் - முதலமைச்சர் முக ஸ்டாலின்

உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம் : ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு

Background

தினம் தினம் சூடாக இருந்த சென்னை நேற்று ஜில்லென மாறியது. நேற்று மாலை வரை மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் மாலைக்குப் பின் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகனமழை பெய்தது. அதன்படி, அடையாறு, நந்தனம், ஆயிரம் விளக்கு, ஆலந்தூர், சென்ட்ரல், மாம்பலம், புரசைவாக்கம், பெசண்ட் நகர், குரோம்பேட்டை, கே.கே.நகர், கோட்டூர் புரம், சைதாப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில்  கனமழை பெய்தது.


அதேபோல், சென்னை அடுத்த புறநகர் பகுதியான பூந்தமல்லி, ஆவடி, ஐயப்பன் தாங்கல், பட்டாபிராம், திருநின்றவூர், மதுரவாயல், போரூர், ராமாபுரம், செம்பரம்பாக்கம் பகுதிகளிலும் கனமழை பெய்தது. கனமழையால் சென்னையின் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை மட்டுமின்றி கடுமையான இடி மின்னலும் இருந்தது. பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தாலும் மின்வெட்டு இயல்பு வாழ்க்கையை பாதித்தது. 


இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் காரைகால் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஆகஸ்ட் 23ம் தேதி முதல் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


ஆகஸ்ட் 24ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 


வரும் ஆகஸ்ட் 25ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் தேனி  ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.”இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திரும்பிச்சென்ற விமானங்கள்:


சென்னையில் பலத்த சூறைக்காற்று, இடி, மின்னலுடன் நேற்று மழை பெய்ததால் துபாய், பக்ரைன், ஹாங்காங், மும்பை, லக்னோ ஆகிய இடங்களிலிருந்து  சென்னை வந்த 5  விமானங்கள் தரையிறங்க முடியாமல்,பெங்களூருக்கு திரும்பிச் சென்றன. மேலும் 20 விமானங்கள் இயங்க தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.


பக்ரையினிலிருந்து 167 பயணிகளுடன் சென்னை வந்த ஃகல்ப் ஏர்வேஸ் விமானம், ஹாங்காங்கிலிருந்து 204 பயணிகளுடன் வந்த கேத்தே பசிபிக் விமானம் மற்றும் மும்பை, லக்னோ விலிருந்து வந்த 5 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் மதுரை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, மும்பை, திருச்சி, கொல்கத்தா உள்ளிட்ட  இடங்களில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டு தாமதமாக தரையிறங்கியதாக கூறப்படுகிறது. 


இதை போல் சென்னையில் இருந்து துபாய், பக்ரைன், திருச்சி, ஹைதராபாத், கொல்கத்தா, டெல்லி, மும்பை ஆகிய இடங்களுக்கு செல்லும்  விமானங்களும் தாமதமாக புறப்பட்டது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.