Breaking News LIVE : நீட் தேர்வு விலக்கில் இறுதி வெற்றி நமக்கே! - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
நீட் தேர்வு விலக்கில் இறுதி வெற்றி நமக்கே!
எந்த சமரசத்துக்கும் இடமளிக்காமல் திராவிடப் பேரியக்கக் கொள்கைகளின் வழிநின்று திராவிட மாடல் ஆட்சியை நடத்திச் செல்வேன்! - முதலமைச்சர் ஸ்டாலின்
மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யும் வகையில் ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கவது இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக ஈபிஎஸ் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் முருகன் சாட்சியம் அளித்ததை அடுத்து ஏப்ரல் 28 ம் தேதி ஒத்திவைத்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியிலிருந்து புதுச்சேரி திரும்பிய ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 29 ம் தேதி முதல் கோழிப்பண்ணைகளை மூடிவிட்டு நிறுவனங்களிடம் சாவியை ஒப்படைக்க இருக்கிறோம் என்று தமிழ்நாடு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பு நலசங்க மாநில செயலர் ரஃபிக் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் மொத்தம் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 18 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்
இந்தியாவில் ஒரேநாளில் 2,541 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரேநாளில் கொரோனாவுக்கு 30 பேர் உயிரிழந்தனர்.
பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர். திருமாந்துறை அருகே முன்னால் சென்ற மினிலாரி மீது மோதி நின்ற கார் மீது பின்னால் வந்த லாரி மோதியது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் விபத்துக்குள்ளானது தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. ரயில் ஓட்டுநர் பவித்ரன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Background
சென்னையில் 19வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை விற்கப்படுகிறது. அதன்படி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு மாற்றமின்றி 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -