Breaking News LIVE: அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் - ஓ.பன்னீர்செல்வம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஆவடி கூடுதல் காவல் ஆணையராக இருந்த விஜயகுமாரி ஐ.பி.எஸ்., சேலத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலத்தின் ஆணையராக இருந்த நஜ்முல் ஹோடா, ஆவடி கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விஜயகுமார் ஐபிஎஸ், ஆவடியின் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் ஐஜி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொன்முடி குறித்து ஆளுநர் கூறிய கருத்துகளுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் கே. அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
அ.தி.மு.க.-விற்கு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்துள்ளதாகவும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. எழுச்சியுடன் வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தொண்டர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோர் தொடுத்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு துகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி , தி.மு.க. உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.இந்நிலையில், தேர்தலை நியாமாக நடத்த உத்திரவிட வேண்டும் என் நாம் தமிழர் கட்சி சார்ப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23.02.2023 மற்றும் 24.02.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.
25.02.2023 முதல் 27.02.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மகளிர் உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய வீராங்கனை பூஜா வஸ்த்ரகர் உடல்நலக்குறைவு காரணமாக விலகிய நிலையில், மாற்று வீராங்கனையாக ஸ்னே ரானா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா உடன் இன்று மாலை அரையிறுதிப்போட்டியில் பங்கேற்க உள்ள நிலையில், இந்திய அணியில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
மகளிர் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டி, இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க உள்ளது.
கோயம்புத்தூர் பகுதியில் சுற்றித்திரிந்த பேரூரில் தஞ்சமடைந்த மக்னா காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினரால் பிடிக்கபப்ட்டது.
பிரதமர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டு கைது செய்யப்பட்ட பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
கோவையில் சுற்றித்திரியும் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தில் நடந்த மோதல் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுகவினருடன் நடந்த மோதல் தொடர்பாக விஜய், கணேஷ்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர்.கேசவன் விலகல் - காங்கிரஸ் அறக்கட்டளை பொறுப்பில் இருந்து விலகுவதாக கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடிதம்
காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர்.கேசவன் விலகல் - காங்கிரஸ் அறக்கட்டளை பொறுப்பில் இருந்து விலகுவதாக கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடிதம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது - மதியம் 2 மணிக்கு முன்பதிவு தொடங்கும் என தேவஸ்தானம் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 4வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி - ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு
சிதம்பரம் கோவில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் - சிதம்பரத்தில் நடைபெற்ற 42வது நாட்டியாஞ்சலி விழா நிறைவு நிகழ்ச்சியில் ஆளுநர் நேற்று பங்கேற்றிருந்தார்
தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 3 ஆம் தேதி ஆலோசனை - மாநில தகவல் ஆணையர், உதவி ஆணையர் பணியிடங்களுக்கு ஏற்கனவே விண்ணப்பம் பெறப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
Background
சென்னையில் தொடர்ந்து ஒன்பது மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
9 மாதங்களை கடந்தும் மாறாத விலை
கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.
அதன்பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது. இந்தசூழலில் பெட்ரோல், டீசல் விலை 278வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று (பிப்ரவரி 23) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை கிட்டதட்ட 9 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என பெட்ரோலியம் மற்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -