Breaking News Live: ஊரக வேலை திட்ட நிதி : மத்திய அரசு பதில் அளிக்க ஆணை
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
பெரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மக்களுக்கான பணியை சிறப்பாக செய்ய வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின்
உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களோடு மக்களாக இருந்தால்தான் ஆதரவு வழங்குவார்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
சொற்ப அளவிலான உதவித்தொகை வழங்கி மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்த வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மலைப்பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை திரும்பப்பெறும் திட்டத்தை ஏப்ரல் 25 க்குள் வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
அந்நிய நாட்டு மரங்களை அகற்ற ஊரக வேலை திட்ட நிதியை பயன்படுத்துவது குறித்து நாளைக்குள் விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"இளையராஜாவின் கருத்தை இடதுசாரிகள், எதிர்க்கட்சிகளால் ஏன் ஏற்க முடியவில்லை. கருத்து சுதந்திரம் பற்றி பேசுபவர்கள்தான் இளையராஜாவின் கருத்தை எதிர்கின்றனர்” - தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கருத்து
வார இறுதியின்படி ரூ.552 கோடி வசூலை உலகளவில் குவித்துள்ளது கேஜிஎப் திரைப்படம். காம்ஸ்கோர் வெளியிட்ட தகவலின்படி ஏப்ரல் 15-17 வரையிலான வார இறுதியின்படி வசூலை வாரிக்குவித்துள்ளது கேஜிஎப். மொத்த வசூல் ரூ.500 கோடியைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல முதல் 3 நாட்கள் வசூலே 100 கோடிக்கு குறைவில்லாமல் குவித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பாஜக தலைவர் ஜெ.பி நட்டா, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள், ஒரு வாய்ப்பையும் தவறவிடாமல், நாட்டின் மிக உயர்ந்த இசைக்கலைஞரான இளையராஜாவை அவமானப்படுத்திவருகிறார்கள். தாங்கள் சார்ந்த கட்சி விரும்பாத கருத்தைக் கூறிய ஒரே காரணத்திற்காக அவரை அவமானப்படுத்துவதா? இது ஜனநாயகமா? வெவ்வேறு கருத்துக்கள் இருந்தாலும், இணைந்து வாழமுடியும் என்பதே ஜனநாயகம்" என தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 5014க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 40112க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், ஆபரணத்தங்கம் இன்று ரூபாய் 33 அதிகரித்து ரூபாய் 5047க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 264 அதிகரித்து ரூபாய் 40376க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் இன்று ஒரே நாளில் 2,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தென்காசி மாவட்டம் புளியரை - செங்கோட்டை வழி சென்ற அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்கள் கிழே விழுந்ததில், இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது
விழுப்புரத்தில் நடந்த மிஸ் கூவாகம் போட்டியில், சென்னையைச் சேர்ந்த திருநங்கை சாதனா பட்டம் வென்றார்
இன்று முதல் இந்தியாவில் உள்ள 11 மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
இன்று நடைபெற இருக்கும் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடரஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.
நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் இன்று கூடுகிறது. வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மாணியக் கோரிக்கைமீது விவாதம்
சென்னையில் 12வது நாளாக தொடர்ந்து இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு மாற்றமின்றி 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்கள் கன மழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Background
சென்னையில் 12வது நாளாக தொடர்ந்து இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு மாற்றமின்றி 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். பெட்ரோல், டீசல் விலையை நான்கு மாதங்களுக்கும் மேலாக சீராக வைத்திருந்து நஷ்டத்தை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருவதால், இந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -