Breaking News LIVE: இருங்காட்டுக்கோட்டையில் ரேஸின் போது ஏற்பட்ட விபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரேயாஸ் என்ற சிறுவன் மரணம்.

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 05 Aug 2023 06:38 PM
இருங்காட்டுக்கோட்டையில் ரேஸின் போது ஏற்பட்ட விபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரேயாஸ் என்ற சிறுவன் மரணம்.

இருங்காட்டுக்கோட்டையில் ரேஸின் போது ஏற்பட்ட விபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரேயாஸ் என்ற சிறுவன் மரணம்.

பொம்மன், பெள்ளியைச் சந்தித்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்தில் இடம்பெற்ற பொம்மன், பெள்ளியைச் சந்தித்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

Breaking News LIVE: மசினங்குடி வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

நீலகிரி மாவட்டம் மசினங்குடிக்கு தனி ஹெலிகாப்ட்டர் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வந்தடைந்தார். 

ராகுலுக்கு எம்.பி பதவி வழங்க காங்கிரஸ் கடிதம்

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்புக்கு தடை விதித்தது. இந்நிலையில், காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி வழங்கவேண்டும் என கடிதம் எழுதியுள்ளார். 

Pakistan Toshakhana Case: முறைகேடு வழக்கில் தீர்ப்பு.. 3 ஆண்டுகள் சிறை; எம்.பி பதவியை இழந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

முறைகேடு குற்றச்சாட்டு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் இம்ரான் கான் தனது எம்.பி பதவியை இழப்பதுடன், 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம்

பனையூரில் நடிகர் விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

மணிப்பூரில் வன்முறை புதிதாக நடப்பதில்லை - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மணிப்பூரில் வன்முறை என்பது புதிதாக நடப்பதில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். 

மதுரை எம்ய்ஸ் மூலம் 22 ஆயிரம் பேருக்கு வேலை - அண்ணாமலை

மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் 22 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

மாநில மொழிகளுக்கு இந்தி மொழி போட்டியல்ல - அமித்ஷா திட்டவட்டம்..

மாநில மொழிகளுக்கு இந்தி மொழி போட்டியல்ல என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். தமிழ், மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகளுக்கு இந்தி மொழி போட்டியாக கொண்டு வருவதாக கூறப்படுவது தவறு என தெரிவித்துள்ளார். எந்தவித எதிர்ப்புமின்றி இந்தி மொழியை அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்வதற்கான தேவையை உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

Breaking News LIVE: தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Breaking News LIVE: 7.5% இடஒதுக்கீடு: மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது - மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு!

7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு..!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 131 கன அடியில் இருந்து 299 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையில் இருந்து பாசனத்திற்உ 9 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. 

இளம் பெண்ணுக்கு தொல்லை - முதியவர் கைது

சென்னை மணலியில் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு தொல்லை கொடுத்ததாக முதியவர் மீது புகார். பெண்ணின் பெற்றோர்கள் தந்த புகாரின் அடிப்படையில் முதியவர் அலாவுதீன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். 

3 ராணுவ வீரர்கள் வீர மரணம்..!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

குறைந்தது தக்காளி விலை..!

கடந்த ஒரு மாதமாக கடும் உச்சத்தில் இருந்த தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்று தக்காளி கிலோ ரூபாய் 100, ரூபாய் 80 மற்றும் ரூபாய் 60 என மூன்று வகையில் சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. 

அமலாக்கத்துறை சோதனை நிறைவு..!

கரூரில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறையின் சோதனை நிறைவு பெற்றுள்ளது. ம்

புதுச்சேரி மாநில அந்தஸ்து.. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் ஒப்புதல்..

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டி, மத்திய அரசை வலியுறுத்துவதற்காக பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பான கோப்பிற்கு ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்  உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆளுநர் மாளிகை உறுதி செய்துள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான கோப்பு, 4 மாதம் தாமதமாக ஜூலை 22 ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகைக்கு வந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Background

Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம்.


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 5) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 441வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.