TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஜனவரி 26-ம் தேதி, குடியரசு தினத்தை ஒட்டி, ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க, தவெக-விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை மரபு
ஒவ்வொரு வருடமும், குடியரசு தினத்தன்ற, ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறுவது மரபு. அதில் பங்கேற்க, முதலமைச்சர், அமைச்சர்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில், வரும் 26-ம் தேதி, இந்தியாவின் 76-வது குடியரசு தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, ஆளுநர் அழைப்பு விடுத்து வருகிறார்.
தேநீர் விருந்தை புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள்
வரும் 26-ம் தேதி நடைபெறும் ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் பங்கேற்க பல்வேறு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள், ஆளுநர் உடனான மோதல் மோதல் போக்கின் காரணமாக தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற தேநீர் விருந்தை கட்சி சார்பாக திமுக புறக்கணித்த நிலையில், அரசின் சார்பாக அமைச்சர்கள் சிலர் மட்டும் பங்கேற்றனர்.
தவெக-விற்கு அழைப்பு விடுத்துள்ள ஆளுநர்.?
இந்த சூழலில், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க, தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி, ஆளுநரை சந்தித்த தவெக தலைவர் விஜய், தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு, புயல் நிவாரண நிதி உள்ளிட்டவைகள் குறித்து மனு அளித்தார். இந்த நிலையில், தற்போது சமீபத்தில் கட்சி தொடங்கிய தவெக தலைவர் விஜய் ஆளுநரின் தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.