Breaking News LIVE: 3வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்;ம் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 24 Jul 2023 03:08 PM
Breaking News LIVE: ட்விட்டர் செயலியின் பெயர், லோகோ மாற்றம் - எலான் மஸ்க் அதிரடி

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரின் பெயர் மற்றும் லோகோ அதிரடி மாற்றம் - ட்விட்டரின் அடையாளமாக திகழ்ந்த நீல நிறக்குருவிக்கு பதில் X என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது. 

இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மக்கள்வை 2.30 மணி வரையும் மாநிலங்களவை 3 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே 2  மணி வரை இதே காரணத்திற்காக ஒத்திவைக்கப்பட்டது. 

மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே 12 மணி வரை இதே காரணத்திற்காக ஒத்திவைக்கப்பட்டது. 

இன்று மதியம் வெளியாகும் பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள்!

 பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியாகும் என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் தெரிவித்துள்ளது. அதேபோல  மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து, விடைத் தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சிகள் அமளி..!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நாடுளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு..!

மணிப்பூர் விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

மாநிலங்களவை ஒத்திவைப்பு..!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மக்களவையில் 12 மணிக்கு மணிப்பூர் விவாதம்..!

மக்களவைவில் இன்று மதியம் 12 மணிக்கு மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி வழங்கியுள்ளார். 

மணிப்பூர் விவகாரம் - பிரதமர் விளக்கமளிக்க வலியுறுத்தல்..!

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் விளக்கமளிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிரபலமான ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை வல்லுநர்கள் இன்று அதாவது ஜூலை மாதம் 24ஆம் தேதி காலை முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஞானவாபி மசூதி பகுதியில் பலத்த  பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Background

இந்திய வானிலை மையம் கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும்  ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும்  விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கண்ணூர் பல்கலைக்கழக பிஎஸ்சி தேர்வில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தென் மேற்கு பருவமழை: 


ஜூன் மாதம் 8 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மாநிலங்களுக்கு நல்ல மழை தருவது தென்மேற்கு பருவமழை தான். கேரளாவில் மட்டுமல்லாமல் வட மாநிலங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. டெல்லி, உத்திர பிரதேசம், உத்தர்கண்ட், ராஜஸ்தான், குஜராத், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் இப்படி ஒரு சூழல் இருக்க. கேரளா மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது.  


எத்தனை நாட்களுக்கு மழை:


கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு மற்றும் காசர்கோடு ஆகிய பகுதிகளுக்குஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் அந்த பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கேரளா மற்றும் லக்ஷ்வதீப் தீவுகளுக்கு ஜூலை 23 முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 செ.மீ முதல் 11 செ.மீ வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 27ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:   


வங்கக்கடல் பகுதிகள்: 


24.07.2023: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு -தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


25.07.2023:மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு -தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும்  மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


26.07.2023 & 27.07.2023: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு -தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும்  மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


அரபிக்கடல் பகுதிகள்: 


27.07.2023 வரை: மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.இலட்சத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40  முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.    

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.