Breaking News LIVE: காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு: காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி
Breaking News LIVE:நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘’நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பற்றி பிரதமர் பேசுவார் என்று நினைத்தால் அவர் நகைச்சுவைதான் செய்து கொண்டிருந்தார். மணிப்பூர் விவகாரம் நகைப்புக்கு உரியது அல்ல’’ என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22ஆவது கூட்டம் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது. இதற்கிடையே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்துக்குப் பிறகு, கர்நாடகா தண்ணீர் திறக்க மறுத்தால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22ஆவது கூட்டம் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது. தமிழ்நாடு சார்பில் நீர்த்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன் கலந்துகொண்டுள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கியது. ஜூலை மாதம் தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. மக்களவை தொடங்கிய நாள் முதல் மணிப்பூர் விவகாரம், பல்வேறு மசோதாக்கள் தாக்கல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் கோஷங்களை எழுப்பி வரும் நிலையில் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளது. இன்று மக்களவை மறு தேதி அறிவிப்பு வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், சாட்சிய சட்டத்துக்கு பதில் புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டங்களில் இந்திய என்ற வார்த்தையை பாரதிய என்று மாற்றுவதற்கு சட்டத்திருத்தம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊர் செல்வோருக்கு வசதியாக, இன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
காலி மனை இடங்களை பதிவு செய்வதற்கான புதிய நடைமுறைகள் தொடர்பாக, பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ளார். காலிமனை 41681 குறிப்பிட்டு பதிவுக்கு வரும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரஸ்தரபு இடத்தினை பதிவுக்கு முன்பாக புகைப்படம் எடுக்க வேண்டும். மேலும், இப்புகைப்படம் ஜியோ கோ ஆர்டினேட்ஸ் கொண்டதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு எடுக்கப்படும் புகைப்படம் ஆவணத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த நடைமுறை 16.8. 2023 முதல் நடைமுறைக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் புதுப்பிக்கப்பட்ட மஞ்சள் நிறப் பேருந்துகளை கொடியசைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் அமளியால் மாநிலங்களவை, மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்
ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைக்காதீர்” - நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் என்பது வதந்தி என்று நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று கூடுதலாக 500 பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. நாளை, நாளை மறுநாள் மற்றும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி விடுமுறை என்பதால், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,880 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,485 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.47,640 ஆகவும் கிராம் ஒன்று ரூ 5,995 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)
ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.76.20-க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிலோ ரூ.76,200-க்கு விற்பனையாகிறது.
தமிழ்நாட்டில் புதுப்பிக்கப்பட்ட மஞ்சள் நிற பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் தற்போது அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்பட்டு வரும் மாநகர பேருந்துகள் நீல நிறங்களிலும், சிவப்பு நிறங்களிலும் இயக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக நவீன வசதிகளுடன் கூடிய மறுசீரமைக்கப்பட்ட 100 பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி சற்று அதிகரிப்பு நேற்று மாலை விநாடிக்கு 5026 கன அடி தண்ணீர் வந்த நிலையில், இன்று காலை 5358 அடியாக அதிகரித்துள்ளது டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து விநாடிக்கு 7500 கன அடி நீர் திறப்பு; நீர் இருப்பு 21.652 டி.எம்.சி. ஆக இருந்து வருகிறது
மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி சற்று அதிகரிப்பு நேற்று மாலை விநாடிக்கு 5026 கன அடி தண்ணீர் வந்த நிலையில், இன்று காலை 5358 அடியாக அதிகரித்துள்ளது டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து விநாடிக்கு 7500 கன அடி நீர் திறப்பு; நீர் இருப்பு 21.652 டி.எம்.சி. ஆக இருந்து வருகிறது
சென்னை ராயப்பேட்டை சத்தியம் திரையரங்கம் அருகே இருந்த மரம் வேரோடு சாய்ந்தது! தகவல் அறிந்த எழும்பூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர்; மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஜூலை 19ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம்.இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 11) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம்
Background
தமிழ்நாடு:
- நாடாளுமன்றத்தில் திமுக குரலை கேட்டாலே பாஜக நடுங்குகிறது - தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
- புதுப்பிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் மஞ்சள் நிறம் தீட்டப்பட்ட அரசு பேருந்துகள் - 100 பேருந்துகளின் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
- சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை - கோத்தகிரியில் சாலையில் ராட்சத கற்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
- தன்னாட்சி கல்லூரிகளுக்கான மாதிரி பாடத்திட்டத்தை அந்தந்த கல்லூரி நிர்வாகங்களே முடிவு செய்து கொள்ளலாம் - தமிழ்நாடு உயர்கல்வித்துறை அறிவிப்பு
- அண்ணா பல்கலைக்கழகத்திற்கு என்.ஏ.ஏ.சி அங்கீகாரம் வழங்கும் விவகாரம் - 8 பேராசிரியர்கள் கொண்ட குழு இன்று ஆய்வு
- கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நிலத்தை அளவீடு செய்ய வந்த சர்வேயர் மீது தாக்குதல் - அதிமுக முன்னாள் கவுன்சிலர் செருப்பால் அடித்த காட்சி இணையத்தில் வைரல்
- புதுகோட்டையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பெண் உதவி காவல் ஆய்வாளர் தற்கொலை முயற்சி
இந்தியா:
- மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி - வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் தீர்மானம் தோல்வி என சபாநாயகர் அறிவிப்பு
- இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க சிலர் முயற்சிப்பதாக திமுகவை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி - நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது முதல் 90 நிமிடங்கள் பிரதமர் மோடி மணிப்பூர் குறித்து பேசாததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
- பிரதமர் மோடி சிலப்பதிகாரத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறார் - மதுரை எய்ம்ஸ் எப்போது வரும் என்பது தொடர்பான கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- பிரதமர் மோடி என்ன பரமாத்மாவா இல்லை கடவுளா? - மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி
- காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் - தொடர் முழுவது பங்கேற்க தடை
- தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இடமில்லை - புதிய மசோதாவை தாக்கல் செய்த மத்திய அரசு
- வன்முறையாளர்களிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்யப்பட வேண்டும் - பிரதமர் மோடிக்கு மணிப்பூர் எம்.எல்.ஏக்கள் கடிதம்
- மணிப்பூர் கலவரத்தின் போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மேலும் ஒரு பெண் - குடும்பத்தினருடன் தப்பிய ஓடியபோது அரங்கேறிய கொடூரம்
- டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நடக்கிறது - தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்
உலகம்:
- ஈகுவடாரில் அதிபர் வேட்பாளர் கொலை விவகாரம் - நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம்
- முன்னாள் அதிபர் டிரம்பின் பதிவுகள் வழங்க தாமதம் - டிவிட்டர் நிறுவனத்திற்கு ரூ.2.9 கோடி அபராதம் விதித்த அமெரிக்க நீதிமன்றம்
- மலேசியாவில் தன்பாலின சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் சுவிட்சர்லாந்து நிறுவன தயாரிப்புகளுக்கு தடை
- ஹவாய் தீவில் பயங்கர காட்டுத் தீ - 36 பேர் பலியான சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல்
விளையாட்டு:
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதியில் இந்தியா - ஜப்பான் அணிகள் இன்று மோதல் - மற்றொரு போட்டியில் மலேசியா - தென்கொரியா பலப்பரீட்சை
- கனடா ஓபன் டென்னிஸ் - இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறிய போபண்ணா ஜோடி
- ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
- - - - - - - - - Advertisement - - - - - - - - -