Breaking News LIVE, July 31: கேரளம்: வயநாடு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

Abpnadu Breaking LIVE July 31 : வயநாடு நிலச்சரிவு செய்திகள், தமிழ்நாடு செய்திகள் உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

குணவதி Last Updated: 31 Jul 2024 09:40 PM
Breaking News LIVE, July 31: கேரளம்: வயநாடு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

Breaking News LIVE, July 31: கேரளம்: வயநாடு, காசர்கோடு, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

 Breaking News LIVE, July 31: கேரளம் வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 270 ஆக அதிகரிப்பு

 Breaking News LIVE, July 31: கேரளம் வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 270 ஆக அதிகரித்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Breaking News LIVE, July 31: வயநாடு நிலச்சரிவு: அதிமுக ரூ. 1கோடி நிதி
Breaking News LIVE: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 240ஆக உயர்வு

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 240ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு பணிகள் தாமதமாகி வருகின்றன. 

Breaking News LIVE: மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கன அடி நீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து உபரிநீராக ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், மாலை 7 மணிக்கு நீர் திறப்பு மேலும் அதிகரித்து 1.70 லட்சம் கண்ணாடியாக உயர்த்தப்பட உள்ளது. 


அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 21,500 கன அடியும், 16 கண் மதக்கல் வழியாக 1,48,500 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. காவிரி ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE, July 31: ஒலிம்பிக் குத்துச்சண்டை: லவ்லினா காலிறுதிக்கு முன்னேறினார்...

Breaking News LIVE, July 31: ஒலிம்பிக் குத்துச்சண்டை இந்தியா: பெண்கள் பிரிவில் லவ்லினா காலிறுதிக்கு முன்னேறினார்...

Breaking News LIVE: வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 200ஆக உயர்வு

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது. முண்டகை, சூரல்மலை பகுதியில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் மண்ணுக்கு அடியில் சிக்கியுள்ளனர். இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு 45க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 


2வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. கனமழை தொடர்ந்து வருவதால் மீட்பு பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது. மேலும் 211 பேரின் நிலைமை என்ன என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. 

Breaking News LIVE: வயநாடு நிலச்சரிவில் 31 தமிழர்களை காணவில்லை - குடும்பத்தினர் தகவல்

வயநாடு நிலச்சரிவில் அம்மாவட்டத்தில் பணியாற்றி வந்த 31 தமிழர்களை காணவில்லை என குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களின் விவரங்களை சேகரித்து வருவதாக தமிழக அரசு அனுப்பிய ஐ.ஏ.எஸ் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது. முண்டக்கை, சூரல்மலை தேயிலை தோட்டங்களில் பணியாற்றி வந்த 8 தமிழர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

Breaking News LIVE : பாரீஸ் ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா வெற்றி 

 


பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா வெற்றி பெற்றுளார். 


டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் சிங்கப்பூரின் ஷெங் ஜியானுடன் அகுலா ஸ்ரீஜா மோதினார். இதில் 4 - 2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி முன்னேறியுள்ளார் ஸ்ரீஜா அகுலா. இவர் 2வது சுற்றிலும் வென்றதன்மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 


 

Breaking News LIVE: சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் 

சென்னை விமான நிலையத்துக்கு இமெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மும்பை, கோவா, பெங்களூரு செல்லும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 


இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இமெயில் முகவரியை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Breaking News LIVE: சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் 

சென்னை விமான நிலையத்துக்கு இமெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மும்பை, கோவா, பெங்களூரு செல்லும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 


இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இமெயில் முகவரியை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Breaking News LIVE: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி!

நீலகிரி மாவட்டம் நீதிமன்றத்தில் நேற்று ஒரு வழக்கு விசாரணைக்காக சவுக்கு சங்கர் கோவை அழைத்துவரப்பட்டுள்ளார். 


அங்கு ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணை முடிந்து இன்று சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வந்தபோது அவருக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சேலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

All India Radio Recruitment : தமிழ் தெரியுமா? வானொலி நிலையத்தில் வேலை- சென்னைவாசிகள் விண்ணப்பிக்கலாம்

Breaking News LIVE July 31: வயநாடு உட்பட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

கேரளா: வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு உட்பட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

கேரளா: வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு உட்பட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

கேரளா: வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு உட்பட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு!

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு!


வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் உயிரிழந்துள்ளார். குன்னூர் கரன்சி பகுதியைச் சேர்ந்த கவுசல்யா என்று இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

கேரளா: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ஷிஹாப் என்னும் தமிழரின் உடல் பாறை இடுக்கிலிருந்து கண்டெடுப்பு!

கேரளா: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ஷிஹாப் என்னும் தமிழரின் உடல் பாறை இடுக்கிலிருந்து கண்டெடுப்பு! நீலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்த ஷிஹாப், பள்ளிவாசலில் மத ஆசிரியராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Nitin Gadkari Letter to Nirmala Sitharaman : “மருத்துவ மற்றும் உயிர் காப்பீட்டு திட்டங்கள் மீதான 18% GST வரியை நீக்குங்கள்” : நிதின் கட்கரி கடிதம்

“மருத்துவ மற்றும் உயிர் காப்பீட்டு திட்டங்கள் மீதான 18% GST வரியை நீக்குங்கள்” : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம்

Kerala Wayanadu Landslide : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ₹1 கோடி வழங்கப்படும்” -செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

“வயநாடு நிலச்சரிவு - நிவாரணப் பணிகளுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ₹1 கோடி வழங்கப்படும்” -செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

Kallanai Water Level : கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது

சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து 3,400 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் திறந்து வைத்து தண்ணீரில் நெல் மணிகள் மற்றும் மலர் தூவினர்.

Tamils Wayanad Landslide Death Toll 9 : வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்த சோகம்!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்த சோகம்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ள தகவலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Nikhila Vimal Relief In Kerala Landslide : DYFI அமைப்புடன் சேர்ந்து வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளில் ஈடுபட்ட நடிகை நிகிலா விமல்

Kerala Landslide Nikhila vimal in wayanad mundakkai Relief works : DYFI அமைப்புடன் சேர்ந்து வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளில் ஈடுபட்ட நடிகை நிகிலா விமல்


 

Andhagan : முன்கூட்டியே வெளியாகிறது ‘அந்தகன்’

Andhagan : முன்கூட்டியே வெளியாகிறது ‘அந்தகன்’


நடிகர் பிரசாந்தின் ‘அந்தகன்’ பட ரிலீஸ் ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்கு மாற்றம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகும் என முன்பு கூறப்பட்டிருந்த நிலையில், ஒரு வாரம் முன்னதாகவே படம் வெளியாகிறது

Kerala Landslide Death Toll : கேரளா: வயநாடு நிலச்சரிவு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170-ஆக உயர்வு

வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 170-ஆக உயர்ந்த சோகம்!

R angapani, Darjeeling: West Bengal :மேற்குவங்கம், டார்ஜிலிங் - ரங்கபாணி என்ற இடத்தில் சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து.

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தின் ரங்கபாணி என்ற இடத்தில் சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து.


கடந்த ஜூன் மாதம் இதே பகுதியில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது

Preethi Sudhan : UPSC-ன் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனம்!

UPSC-ன் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கலாம் - கேரள முதலமைச்சர் அறிவிப்பு

வயநாடு துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க விரும்புபவர்கள் நிவாரண உதவியை வழங்கலாம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

CM Stalin kabaleeswarar college : 1400 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளோம். கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கியுள்ளோம்.. முதல்வர் பேச்சு

1400 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளோம். கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கியுள்ளோம்..


கொளத்தூரில் கபாலீசுவரர் கல்லூரி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 162-ஆக உயர்வு!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 162-ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Breaking News LIVE July 31: முண்டக்கையில் ஒரே குடும்பத்தில் உயிரிழந்த 9 பேரும் தமிழர்கள் என தகவல்

Breaking News LIVE July 31: முண்டக்கையில் ஒரே குடும்பத்தில் உயிரிழந்த 9 பேரும் தமிழர்கள் என தகவல் தெரியவந்துள்ளது

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த கல்யாணகுமாரின் குடும்பத்திற்கு ₹3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த கல்யாணகுமாரின் குடும்பத்திற்கு ₹3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு - முதலமைச்சர்

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நீலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்த கல்யாண்குமார் குடும்பத்திற்கு தலா ரூபாய் 3 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நிலச்சரிவு- உயிரிழப்பு எண்ணிக்கை 157 ஆக உயர்வு

நிலச்சரிவு- உயிரிழப்பு எண்ணிக்கை 157 ஆக உயர்வு


கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில், சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல். 216 பேரை காணவில்லை என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட 130-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது

கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது


நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டுக்கு சென்றபோது, கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் நடந்த விபத்தில் சிக்கிய அமைச்சருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது

இரு தனியார் பேருந்துகள் வயலூர் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 20 பேர் படுகாயம்!

தஞ்சாவூர் - கும்பகோணம் இடையே இயக்கப்படும் இரு தனியார் பேருந்துகள் வயலூர் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 20 பேர் படுகாயம்!

வயநாடு நிலச்சரிவு - 80 வடமாநில தொழிலாளர்கள் மீட்பு!

வயநாடு அட்டமலையில் குடும்பங்களாக தங்கி தேயிலை தோட்டங்களில் வேலை செய்து வந்த மத்தியபிரதேச தொழிலாளர்கள் 80 பேர் நிலச்சரிவுப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் 

Hogenakkal Cauvery Water : ஒகேனக்கல்: காலை 6.45 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,00,000 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (31.07.24) காலை 6.45 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,00,000 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

Kerala Landslide : தமிழ்நாடு, மீட்புப்படையினர், தீயணைப்புக்குழு, மருத்துவக் குழு கேரளா சென்றடைந்தனர்

கேரள நிலச்சரிவு : உயிரிழந்தோர் எண்ணிக்கை 151-ஆக உயர்வு 


Kerala Landslide : தமிழ்நாடு, மீட்புப்படையினர், தீயணைப்புக்குழு, மருத்துவக் குழு கேரளா இன்று காலை 4 மணிக்கு சென்றடைந்தனர். 

கேரள நிலச்சரிவு : உயிரிழந்தோர் எண்ணிக்கை 151-ஆக உயர்வு

கேரள நிலச்சரிவு : உயிரிழந்தோர் எண்ணிக்கை 151-ஆக உயர்வு 


கேரள நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 151-ஆக உயர்வு. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மழைக்கு இடையே மீட்புப்பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. 

Vairamuthu On Landslide : மண் விழுந்து போனவர்க்கெல்லாம் என் கண்விழுந்த கண்ணீரில் அஞ்சலி செலுத்துகிறேன்

பார்க்கப் பார்க்கப் பதற்றம் தருகிறது கேரளத்தின் நிலச்சரிவால் நேர்ந்த நெடுந்துயரம் இருந்த வீடுகளே இடுகாடுகளானதில் இந்திய வரைபடத்திலிருந்தே சில கிராமங்கள் இல்லாமல் போய்விட்டன அது ஜலசமாதியா நிலச் சமாதியா என்று சொல்லத் தெரியவில்லை பிணமாகிப் போனவர்களின் கடைசிநேரத் துடிப்பு என் உடலில் உணரப்படுகிறது மனிதனுக்கு எதிராக இயற்கை போர்தொடுத்தது என்றும் சொல்லலாம் இயற்கைக்கு எதிராக மனிதன் தொடுத்த போரின் பின்விளைவு என்றும் சொல்லலாம் மலைகளை மழித்தல் காடுகளை அழித்தல் நதிகளைக் கெடுத்தல் எல்லாம் கூடி மனிதர்களைப் பழிவாங்கியிருக்கின்றன புவி வெப்பத்தால் பைத்தியம்பிடித்த வானிலை இன்னும் இதுபோல் செய்யக்கூடும் மனிதர்களும் அரசுகளும் விழிப்போடிருத்தல் வேண்டும் மூச்சுக் குழாயில் மண் விழுந்து போனவர்க்கெல்லாம் என் கண்விழுந்த கண்ணீரில் அஞ்சலி செலுத்துகிறேன்

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் கேரள ஆளுநர்

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் சென்று அந்த மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் ஆய்வு செய்ய உள்ளார்.

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 211 பேரின் கதி குறித்து கவலை

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 211 பேரின் நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி

நரம்பியல் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வரும் நிலையில், நத்தம் விஸ்வநாதன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ரோலர் ஹாக்கி போட்டியில் விளையாடி பதக்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கி கௌரவித்துள்ளார் அமைச்சர் உதயநிதி

2022-ஆம் ஆண்டில் தேசிய அளவிலான ரோலர் ஹாக்கி போட்டியில் விளையாடி பதக்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கி கௌரவித்துள்ளார் அமைச்சர் உதயநிதி

Wayanad Landslide : வயநாட்டில் தொடரும் சோகம்!

Wayanad Landslide : வயநாட்டில் தொடரும் சோகம்!


வயநாட்டில் நிலச்சரிவு : எண்ணிக்கை 135-ஆக உயர்வு. 

மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்படும்

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Background

 



  • வயநாடு நிலச்சரிவில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி தீவிரம் – இரவு நேரத்திலும் தீவிரமாக நடந்த மீட்பு பணி

  • வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை ராணுவம், விமானப்படை இணைந்து தீவிரமாக மீட்டு வருகின்றனர்.

  • வயநாடு நிலச்சரிவில் சிக்கி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே உடல்கள் சிதறி கிடக்கும் கோரம் – நாடே வேதனை

  • கேரளாவில் தொடர்ந்து கனமழை; 11 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

  • வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு – தமிழர்கள் 2 பேர் உயிரிழப்பு

  • வயநாடு நிலச்சரிவு; உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூபாய் 2 லட்சம் நிதி – பிரதமர் மோடி

  • நிலச்சரிவால் சோகத்தில் மூழ்கிய கேரளம்; தமிழ்நாடு அரசு ரூபாய் 5 கோடி நிவாரண நிதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • வயநாட்டில் மோசமான வானிலை; பயணத்தை ஒத்தி வைத்த ராகுல்காந்தி, பிரியங்கா

  • தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணை 43வது முறையாக நிரம்பியது

  • தமிழ்நாட்டில் 331 பேருக்கு சிக்கன்குனியா பாதிப்பு – சுகாதாரத்துறை

  • தமிழ்நாட்டிற்கு ஆகஸ்ட் மாதத்திற்கான காவிரி நீரை வழங்க காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை

  • நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜாமின்

  • பட்ஜெட்டில் மாநிலத்தின் பெயர் இல்லை என்றால் புறக்கணிப்பு என்று அர்த்தம் இல்லை – நிர்மலா சீதாராமன்

  • புதுச்சேரியில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்

  • ஒலிம்பிக்கில் மனுபாக்கர் – சரப்ஜோத் சிங் இணைக்கு வெண்கலம்

  • இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 – சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.