Breaking News LIVE, AUG 3: அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை - வானிலை மையம்
Breaking News LIVE, AUG 3: உள்ளூர் அரசியல் தொடங்கி பாரிஸ் ஒலிம்பிக் வரையிலான, முக்கிய நிகழ்வுகளை பற்றி உடனடியாக அறிய ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.
அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பிரபலமான உலகளாவிய தலைவர் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி மீண்டும் முதலிடத்தில் உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உலகம் முழுவதும் பிரபலமான தலைவராக உருவெடுத்துள்ளார்.
உலகளாவிய தலைவர்களின் முக்கிய முடிவுகளை கண்காணிக்கும் உலகளாவிய முடிவு நுண்ணறிவு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் சமீபத்திய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. ஜூலை 8-14 வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் பிரபலமான தலைவர் யார் என்ற கேள்விக்கு பிரதமர் மோடி என 69 சதவீதம் பதிலளித்துள்ளனர். மேலும் 63 சதவீதம் பேர் மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோரை தேர்வு செய்து இரண்டாவது இடத்தை கொடுத்துள்ளனர்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மதன் ரத்தோட் இன்று பொறுப்பேற்றார். இந்நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மாநில பாஜக முன்னாள் தலைவர் சிபி ஜோஷி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Breaking News LIVE, AUG 3: இன்று இரவு 7 மணிவரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், கோவை, தேனி, திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வில்வித்தை மகளிருக்கான தனிநபர் எலிமினேஷன் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை பஜன் கவுர் தோல்வியடைந்து கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.
பாரீஸ் ஒலிம்பிக்கின் 25M ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்தது குறித்து துப்பாக்கி சுடும் வீரர் மனு பேக்கர் கூறுகையில், "இது எனக்கு ஒரு சிறந்த ஆட்டம். நான் நன்றாக சுட்டேன். இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் இன்னும் வேலை செய்வேன். எதிர்காலத்தில் கடினமானதாக இருக்கலாம். நான் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். ஆனால் நான் அதிக முயற்சி மற்றும் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
சென்னை: சர்கோமா புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட 'வின்னர்ஸ் ஆன் வீல்ஸ்' சைக்ளோதான் போட்டியில், தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் கொடியசைத்து, பங்கேற்றார்.
இமாச்சல பிரதேசம்: பலத்த மற்றும் இடைவிடாத மழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு காரணமாக குலுவில் இருந்து பந்தோல் கிராமம் துண்டிக்கப்பட்டுள்ளது.
.மேட்டூர் அணை முழு கொள்ளளவு எட்டு உள்ள நிலையில், உபரிநீர் திறக்கப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் குளிக்க தடை.
மாவட்ட நிர்வாகம் சார்பில் மேட்டூர் அணை வரவேண்டாம் என எச்சரித்ததால் மேட்டூர் வெறிச்சோடி காணப்பட்டது.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டூர் அணை வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள சூரிகாவோ டெல் சுர் மாகாணத்தில் சனிக்கிழமை காலை 6.8 ரிக்டர் அளவில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 6:22 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கடலோர நகரமான லிங்கிக்கிலிருந்து வடகிழக்கே 66 கிமீ தொலைவில் 9 கிமீ ஆழத்தில் தாக்கியதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆடி 18 - யை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மாமண்டபம் காவேரி ஆற்று படித்துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்து வருகின்றனர். புதுமணத்தம்பதிகள் பூஜைகள் செய்து தாலி மாற்றிக்கொண்டனர்.
Background
- உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே நம்பர் ஒன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 100% ஆகும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
- விவசாயிகளிடம் இருந்து செப்டம்பர் 1ம் தேதி முதல் சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,450க்கு கொள்முதல் செய்யப்படும்: அமைச்சர் அறிவிப்பு
- மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு தற்கொலைக்கு சமம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி
- ஆணவக்கொலைகளைத் தடுத்திட தனிச்சட்டம் இயற்ற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
- இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடல் ராமேஸ்வரம் வந்தது - காயமடைந்த 2 மீனவர்களையும் விடுவித்தது இலங்கை கடற்படை
- தமிழ்நாடு முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு உற்சாக கொண்டாட்டம் - ஈரோடு, திருவையாறு, திருச்சி, பகுதிகளில் பூஜைகள் செய்யவும், புனித நீராடவும் பாதுகாப்பு ஏற்பாடு
- வயநாடு நிலச்சரிவு 5வது நாளாக தொடரும் மீட்பு பணி - பலி எண்ணிக்கை 330-ஐ கடந்துள்ளது
- வயநாடு மீட்பு பணியில் முக்கிய பங்காற்றும் தற்காலிக பெய்லி பாலம் - பாலம் அமைப்பதில் 144பேர் கொண்ட குழுவை வழிநடத்திய ராணுவ மேஜர் சீதா அசோக்கிற்கு குவியும் பாராட்டு
- இந்தியா - இஸ்ரேல் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம் - அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கவும் எச்சரிக்கை
- வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களில் 100 பேருக்கு காங்கிரஸ் வீடு கட்டி தரும் - ராகுல் காந்தி
- பெரும்பான்மைக்கான ஆதரவை பெற்றார் கமலா ஹாரிஸ் - ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராவது உறுதி
- பிலிப்பைன்சில் ரிக்டர் அளவுகோளிலில் 6.8 அளவில் பதிவான நிலநடுக்கம்
- பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் தனிநபர் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேறி வரல்லாற்றுச் சாதனை
- பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளில் 25மீ பிஸ்டல் பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற மனு பாக்கர் - ஹாட்ரிக் பதக்கம் வெல்வார் என எதிர்பார்ப்பு
- இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -