Breaking News LIVE, Aug 1: ஸ்வப்னில் குசேலுக்கு ₹1 கோடி பரிசுத் தொகை - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
Breaking News LIVE, Aug 1: பாரிஸ் ஒலிம்பிக் உட்பட உலகின் முக்கிய செய்திகளின் அப்டேட்களை, உடனடியாக அறிய ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் ஸ்வப்னில் குசேலுக்கு ₹1 கோடி பரிசுத் தொகை - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, ஆறுதல் தெரிவித்த ராகுல் காந்தி, பிரியங்கா!
சென்னை தரமணியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மேயர் பிரியா!
பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியைகளின் அணுகுமுறை, சத்துணவின் சுவை குறித்து மாணவர்களிடம் கருத்துகள் கேட்டறிந்தார்!
“இந்த கல்லூரிக்கு முதலமைச்சராக வரவில்லை, இங்கு படித்த மாணவரின் பெற்றோராக வந்திருக்கிறேன்..” - சென்னை லயோலா கல்லூரி நூற்றாண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் - லக்ஷய சென் காலிறுதிக்கு தகுதி!
கோவை: பொள்ளாச்சி அருகே காளியப்பா கவுண்டன் புதூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக தரைப்பாலம் ஆற்றில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் பொது போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலரும் ஆபத்தை உணராமல் புகைப்படம், வீடியோக்களை எடுத்து வரும் நிலையில், பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கேரள நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகளுக்காக நடிகர் பகத் பாசில் மற்றும் நடிகை நஸ்ரியா ரூ.25 லட்சம் நிதியுதவி
Aadi Pradosham : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தையொட்டி, நந்தி சிலைக்கு பால், தயிர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
Breaking News LIVE, Aug 1: இலங்கை ரோந்து படகு மோதி, இறந்த தமிழ்நாடு மீனவர் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை தேவை என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஜூலை மாத ரேஷன் பொருட்களை ஆகஸ்ட்டில் பெறலாம். ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டைதாரரின் நன்மையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது - தமிழ்நாடு அரசு
"வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை" - வயநாடு நிலச்சரிவை நேரில் பார்வையிட்ட பின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேச்சு
"என் தந்தையை இழந்தபோது எவ்வளவு துக்கமடைந்தேனோ அதே துக்கத்தில்தான் இப்போது இருக்கிறேன்" -ராகுல் காந்தி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று மாலை 4 மணி நிலவரப்படி, விநாடிக்கு 2,00,000 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது
இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி உயிரிழந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர் மலைச்சாமி குடும்பத்துக்கு ₹10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
"ஒருவரின் சாதி என்ன என்று தெரிந்து கொள்வதில் என்ன பெருமை உள்ளது? சாதி என்ற கட்டமைப்பை ஒழிக்க காலம் காலமாக பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். சாதி என்பதை பெருமை என்று சொல்லக்கூடிய ஆட்சியாக மோடி ஆட்சியாக உள்ளது" -மக்களவையில் மத்திய அரசுக்கு திமுக எம்.பி. கனிமொழி கேள்வி
"ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் வாங்க முடியவில்லை.. அங்கேயும் இந்தியை திணிக்கிறீர்கள்"- மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி., பேச்சு
Breaking News LIVE, Aug 1: பாரீசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், காலிறுதிக்கு முன்னேறிய இந்திய ஆடவர் ஹாக்கி அணி பெல்ஜியத்திடம் தோல்வியை தழுவியது
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பாதுகாப்பு காரணங்களுக்காக மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்.
கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் இருபுறங்களிலும் தற்போது போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு, அனைத்து வாகனங்களும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்
"மணிமேகலையின் கையில் இருக்கும் அட்சய பாத்திரத்தை பிடுங்கிக்கொண்டு பிச்சை பாத்திரத்தை கொடுப்பதுபோல் உள்ளது..!" தமிழ்நாட்டிற்கு கல்விக்கு உரிய நிதி ஒதுக்காதது குறித்து மக்களவையில் திமுக எம்.பி., கனிமொழி பேச்சு
இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழப்பு; இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு உரிய தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க வலியுறுத்தி தாலுகா அலுவலகத்திற்கு முன்பாக மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்! உயிரிழந்த மீனவர் உடலை ராமேஸ்வரத்திற்குக் கொண்டு வரவும், உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்!
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி துவங்கிய கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.
நிலச்சரிவின் மீட்பு பணிகள் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் காண்போர் மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த பெருந்துயரில் மீள முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.
இந்த நிலையில், பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ரூ. 50 இலட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள். மேலும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு, தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ மற்றும் எம்.பி., ஆக இருந்து மக்கள் பணியாற்றிய அவருக்கு, சுதந்திர தினத்தின் போது முதலமைச்சர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக நேப்பியர் பாலத்தில் பாதுகாப்பு நலன் கருதி போக்குவரத்து நிறுத்தம் - வாகனங்கள் அனைத்தும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக மாற்றம்
இமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் கனமழை மற்றும் மேக வெடிப்பு காரணமாக நிலவரத்தை பிரதமர் நரேந்திர மோடி உன்னிப்பாக கவனித்து வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு உயர் அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து சுமார் 1.7 லட்சம் கன அடிக்கு மேல் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மேட்டூர் அணைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
ஆடிப்பெருக்கு விழாவின்போது பொதுமக்கள் காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
காவிரி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீரில் இறங்கி குளிக்க, நீச்சல் அடிக்க, மீன்பிடிக்க மற்றும் புகைப்படம் எடுக்க தடை.
-சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவு.
சென்னை விமான நிலையத்தில் 8 கிலோ தங்கம் பறிமுல் செய்யப்பட்டுள்ளது. துபாய் , சிங்கப்பூர், இலங்கை நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் நடத்திய சோதனையில் தங்கம் சிக்கியது. ரூ. 5.6 கோடி மதிப்பிலான தங்கத்தை 3 விமானங்களில் கடத்தி வந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
100 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ள முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சி பி சி ஜ டி அலுவலகத்தில் இன்று கையெழுத்திட்டார்.
கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனக்கு வேண்டியவர்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டவர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கில் கரூர் முதலாவது குற்றவியல் நடுவர் மன்றம் நேற்று முன்தினம் எம். ஆர். விஜயபாஸ்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அந்த உத்தரவில் தினசரி காலை மற்றும் மாலை இருவேளையும் சிபிசி ஐடி அலுவலகத்தில் கையெழுத்து இட வேண்டும் என உத்தரவிட்டது. திருச்சி மத்திய சிறையில் இருந்து நேற்று ஜாமீனில் எம் ஆர் விஜயபாஸ்கர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து இன்று காலை 10 மணி அளவில் கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் அவர் கையெழுத்திட்டார்.
புதுச்சேரி 15 வது சட்டப்பேரவையின் 5 வது கூட்டத்தொடர் நேற்று துணை நிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
இன்று காலை 09.30 மணிக்கு சட்டபேரவை தலைவர் குறள் வாசிக்க தொடங்கியது.
இன்றைய கூட்டத்தில் சட்ட முன்வரைவுகளுக்கு இசைவு அளித்ததை அறிவித்தல். துணை நிலை ஆளுநர் உரை மீதான உரைக்கு நன்றி தெரிவித்தல் நடைபெற உள்ளது.
கே.அன்பழகன். அதிமுக எம்பலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
கேரளா - வயநாடு பகுதிகளில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதற்காக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7 முதல் 11 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.
"#தாய்ப்பால்" கொடுக்கும் தாய்க்கும் ஆரோக்கியம் அளிக்கின்றது...
பெறும் சேய்க்கும் ஆரோக்கியம் அளிக்கின்றது...
#தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்...
#Breastfeedingweek
திருச்சி மாவட்டம் அந்த நல்லூர் அருகே உள்ள அல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் பாரதி தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். தொடர்ந்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்
திருச்சி மாவட்டம் அந்த நல்லூர் அருகே உள்ள அல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் பாரதி தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார் தொடர்ந்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீன்பிடி விசைப் படகு மீது இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் படகு மூழ்கியது: நான்கு மீனவர்கள் மாயம் என தகவல்
வயநாடு நிலச்சரிவு - 3 நாட்களுக்கு இலவச டேட்டா, Unlimited Calls வழங்கும் ஏர்டெல்..!
கர்நாடக அனைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 2.50 இலட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.40 இலட்சம் கன அடியிலிருந்து 1.70 இலட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி, வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. ஒகேனக்கல்லில் 18-வது நாளாக தடை நீடிக்கிறது.
Background
- 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படுகிறது
- டெல்லி விரைந்த அண்ணாமலை - இனி செத்தாலும் விமான நிலையத்தில் பேசமாட்டேன் என பேட்டி
- வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.7.50 உயர்வு - வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
- நீலகிரி மாவடத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கவனமுடன் இருக்க மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தல் - தொடர் கனமழை காரணமாக எச்சரிக்கை
- புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்; பாஜ அமைச்சரிடம் இருந்து முக்கிய துறைகளை பறித்த முதல்வர் ரங்கசாமி: அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில் அதிரடி
- கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270 ஆக அதிகர்ப்பு - ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி இன்று நேரில் வருகை
- வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்
- 32 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டு - ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரகம் விசாணை
- உத்தரகாண்ட்: கனமழையால் வீடு இடிந்து 3 பேர் பலி; 6 பேர் காயம்
- டெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
- இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்துங்கள் என ஈரான் தலைவர் உத்தரவு - ஏமன், சிரியா மற்றும் ஈராக் நாடுகளுடன் இணைந்து தாக்குதல் நடத்த பரிசீலனை
- வயநாடு நிலச்சரிவு - பிரதமர் மோடிக்கு இரங்கல் செய்தி அனுப்பிய புதின்
- பாரிஸ் ஒலிம்பிக் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு பிரனாய் முன்னேற்றம்
- டி.என்.பி.எல். நாக் அவுட் சுற்று - சேப்பாக் கில்லீஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் அணி வெற்றி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -