Breaking News LIVE: தஞ்சை - பழனி இடையே நாளை, நாளை மறுநாள் சிறப்பு ரயில்

BREAKING NEWS: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 04 Apr 2023 08:31 PM
தஞ்சை - பழனி இடையே நாளை, நாளை மறுநாள் சிறப்பு ரயில்

தஞ்சை - பழனி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: இன்றைய கொரோனா தொற்று நிலவரம் - தமிழ்நாடு!

 தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா தொற்றால் 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,086 ஆக உயர்ந்துள்ளது.

Breaking News LIVE : நேட்டோ கூட்டமைப்பில் இணைந்தது பின்லாந்து!

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் 31-வது நாடாக இணைந்தது.
ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்த் வந்த நிலையிலும் நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இணைந்தது பின்லாந்து.

திருப்பூரில் கொரோனாவால்ன் உரிழப்பு..!

திருப்பூரில் கொரோனாவால் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  

Breaking News LIVE: கேரளாவில் ரயில் பயணிகள் மீது தீ வைத்த நபர் கைது

கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் உத்திரப்பிரதேசத்தில் கைது - 3 பயணிகள் உயிரிழந்த நிலையில் போலீசார் தீவிர விசாரானை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழ்நாட்டில் கட்டாயம் ஆகும் முகக்கவசம்.. பொது சுகாதாரத்துறை அறிவுருத்தல்..

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. திரையரங்கம், கூட்ட அரங்குகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக விசாரணைக்குழு அமைப்பு

கலாஷேத்ரா கல்லூரி பாலியல்  தொல்லை விவகாரத்தில் விசாரணை நடத்த முன்னாள் டிஜிபி லத்திகா சரண் அடங்கிய குழு அமைப்பு - குற்றச்சாட்டுக்கு உள்ளான உதவி பேராசிரியர் ஹரி பத்மன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையொல் கலாஷேத்ரா சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: லாரிக்கு அடியில் சிக்கி தீப்பிடித்து எரிந்த பைக் - ஒருவர் உயிரிழப்பு 

ராணிப்பேட்டை மாவட்டம் சுமைதாங்கி அருகே லாரிக்கு அடியில் பைக் சிக்கி தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு - விபத்தில் சிக்கிய பைக் தீப்பிடித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி 

Breaking News LIVE: 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு அட்டவணை அறிவிப்பு

தமிழகத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு அட்டவணை அறிவிப்பு - ஏப்ரல் 21 ஆம் தேதி வரை தொடங்கும் தேர்வு 28 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு 

Background

சென்னையில் 318வது நாளில் இருக்கும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளின் இன்றைய விலை நிலவரத்தை காணலாம். 


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில்,  முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றது. அந்த வரிசையில் இந்தியாவும்  முழு  முயற்சியில்  களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம் 


சென்னையில் இன்று (ஏப்ரல் 4) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து விலை மாற்றமின்றி இன்றோடு 318வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.


இதனைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.