Breaking News Live: தமிழ்நாட்டில் இன்று 21 பேருக்கு கொரோனா பாதிப்பு

Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

ABP NADU Last Updated: 09 Apr 2022 06:22 PM
தமிழ்நாட்டில் இன்று 21 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் நேற்று 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 9 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் கொரோனாவால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 ஆக பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 300க்கும் கீழ் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 229 பேர் மட்டுமே கொரோனாவால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 29 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி விலை குறைப்பு 

தனியார் மருத்துவமனைகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.600-லிருந்து ரூ.225 ஆக குறைப்பு: சீரம்


கோவாக்சின் தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.1200-லிருந்து ரூ.225 ஆக குறைப்பு: பாரத் பயோடெக் நிறுவனம் 

நாமக்கல்லில் ஆலங்கட்டி மழை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை 

ராமேஸ்வரத்தில் 1 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் ராமேஸ்வரத்தில் பறிமுதல் -  ஒருவர் கைது 

நர்சிங் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது

திண்டுக்கல் தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை. ஏற்கெனவே ஜோதிமுருகன் போக்சோவில் கைதாகி நீதிமன்ற காவலில் உள்ள நிலையில் ஆட்சியர் விசாகன் உத்தரவு 

நீதிமன்றத்தை நாடிய பாகிஸ்தான் அரசு 

வாக்கெடுப்பை பாகிஸ்தான் அரசு தாமதப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில் நீதிமன்றத்தை நாடியது பாகிஸ்தான் அரசு 

நம்பிக்கையில்லா தீர்மானம் - பாக் அரசு மேல்முறையீடு

நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்த துணை சபாநாயகரின் நடவடிக்கை செல்லாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு மேல்முறையீடு 

தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்புள்ள மாவட்டங்கள்

மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்பு

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்பு 

24 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு 

இந்திப் திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - அமித்ஷாவின் இந்தி தொடர்பான கருத்தை எதிர்த்து ஓபிஎஸ் அறிக்கை..

இந்திப் திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - அமித்ஷாவின் இந்தி தொடர்பான கருத்தை எதிர்த்து ஓபிஎஸ் அறிக்கை..

ஆட்டோ கட்டணம் - தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இனி வாராந்திர கொரோனா தடுப்பூசி முகாம்கள் இல்லை - சுகாதாரத்துறை

தமிழ்நாட்டில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இனி நடத்தப்படாது என்றும், தேவைப்பட்டால் அந்தந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடுப்பூசி முகாமை நடத்தலாம் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.  தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோர பகுதி, மன்னார் வளைகுடா, தென்மேற்கு, குமரிகடல், வங்கக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் - பாக்., நாடாளுமன்றம் கூடியது

பிரதமர் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் - பாக்., நாடாளுமன்றம் கூடியது

வார இறுதியில் தங்கம் வாக்குபவர்கள் கவனத்திற்கு... இன்றைய விலை நிலவரம் இதுதான்!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 உயர்ந்து ரூ. 4,919க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரனுக்கு ரூ.263 குறைந்து ரூ.39,352க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சமூகத்துக்கு பயனளிக்கும் வகையில் முற்போக்கான படங்களை எடுக்கவேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்

சமூகத்துக்கு பயனளிக்கும் வகையில் முற்போக்கான படங்களை எடுக்கவேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்

தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னையில் தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் இயக்குநர் ராஜமெளலி, நடிகர்கள் ஜெயம் ரவி, ஜெயராம், ரமேஷ், அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிஐஐ கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் மாநாடு நடைபெற இருக்கிறது.

தென்னிந்திய ஊடகம், பொழுதுபோக்கு தொடர்பான மாநாடு : கருத்தரங்கத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தென்னிந்திய ஊடகம், பொழுதுபோக்கு தொடர்பான மாநாடு : கருத்தரங்கத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தென்னிந்திய ஊடகம், பொழுதுபோக்கு தொடர்பான மாநாடு : கருத்தரங்கத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தென்னிந்திய ஊடகம், பொழுதுபோக்கு தொடர்பான மாநாடு : கருத்தரங்கத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

இந்தியா : 1,150 பேருக்கு ஒரேநாளில் உறுதியானது கொரோனா தொற்று

இந்தியா : 1,150 பேருக்கு ஒரேநாளில் உறுதியானது கொரோனா தொற்று

ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் குல்காமில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை. அனந்த்நாக்கின் ஸ்ரீஹமாவில் சுட்டுக்கொல்லப்பட்ட நிசார் தார் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் படைத்தளபதி ஆவார்.

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று தாக்கல் 

சென்னை மாநகராட்சியின் 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கலாகிறது. மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் பட்ஜெட் கூட்டம் நடைபெறுகிறது.

பொதுத்தேர்வு - மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் சலுகை

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கிட தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறன் தேர்வர்கள் தரைதளத்திலேயே தேர்வெழுதும் வசதி தேர்வுக் கட்டணத்தில் விலக்கு உள்ளிட்ட சலுகைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிலக்கரி கையிருப்பு இல்லாததால் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1 மற்றும் 4 வது பிரிவுகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. நிலக்கரி கையிருப்பு இல்லாததால் 2,3,5 ஆகிய பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தம். இதன் காரணமாக 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.

வில் ஸ்மித் ஆஸ்கர் ஆஸ்கர் விருது விழா அகாடமி நிகழ்ச்சிகளில் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் ஆஸ்கர் விருது விழா அகாடமி நிகழ்ச்சிகளில் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்ததால் அகாடமி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Background

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நாளை தொடங்க உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசிகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 


தனியார் மருத்துவமனைகளுக்கு  கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸ் விலை 600 லிருந்து 225 ஆக சீரம் நிறுவனம் குறைத்துள்ளது. 


கோவாக்சின் தடுப்பூசி ஒரு டோஸ் விலை 1,200 லிருந்து 225 ஆக குறைத்துள்ளது பாரத் பயோடெக் நிறுவனம்.


இலங்கை மக்கள் அனைவருக்கு உதவ வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அனைத்து மக்களும் ஒன்றுபடும் வேளையில் தமிழ் மக்களுக்கு மட்டும் உதவுவது பிளவை ஏற்படுத்தும் எனவும் இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


இந்தியாவில் கடந்த 130 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே விலையில் நீடித்து வந்தது. இந்த நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல்கள் முடிவுகள் வெளியான நிலையில் சென்னையில் கடந்த 16 நாட்களில் 14ஆவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன. 


இந்த நிலையில், சென்னையில் 3வது நாளாக இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மாற்றமின்றி 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு மாற்றமின்றி 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.