Breaking News LIVE: தமிழ்நாட்டில் இன்று 22 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

முகேஷ் Last Updated: 08 Apr 2022 08:21 PM
அதிர்ஷ்டத்தால் தப்பித்த லிவிங்ஸ்டன்..! அதிரடி ஆட்டம் ஆரம்பம்..!

பஞ்சாப் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் லிவிங்ஸ்டன் குஜராத் வீரர் ரஷீத்கான் பந்தில் கொடுத்த கடினமான கேட்ச்சை ஹர்திக் பாண்ட்யா பிடித்தார். ஆனாலும், அந்த கேட்ச்சின் போது ஹர்திக் பவுண்டரி எல்லையை மிதித்ததால் மூன்றாவது அம்பயரால் சிக்ஸ் கொடுக்கப்பட்டது.  

தமிழ்நாட்டில் இன்று 22 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

தமிழ்நாட்டில் இன்று புதியதாக 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றும் கொரோனா பாதிப்பால் புதியதாக யாரும் உயிரிழக்கவில்லை. இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 32 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 237 பேர்  கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி : சட்டபேரவையில் முதலமைச்சர் பேச்சு

அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக  சட்டபேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

வெப்பச்சலனத்தால் டெல்டா மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

ஹஜ் பயணம் - அரசின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவு

புனித ஹஜ் பயணத்தின் புறப்பாட்டு இடமாக சென்னையை மீண்டும் அறிவிப்பது பற்றி பரிசீலிக்க ஹஜ் கமிட்டிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

புதுச்சேரியில் பீஸ்ட் படத்தின் டிக்கெட் விலை உயர்வு

புதுச்சேரி மாநிலத்தில் பீஸ்ட் படத்திற்கும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் படம் வெளியாகும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை டிக்கெட் விலை  கூடுதலாக 100 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு.

மீஞ்சூர் பகுதியில் வீடுகளுக்கு மேற்புறம் உயர் மின் அழுத்த கம்பிகள்.. நடவடிக்கை எடுக்கப்படும் - மின்சாரத்துறை அமைச்சர்

மீஞ்சூர் பகுதியில் வீடுகளுக்கு மேற்புறம் உயர் மின் அழுத்த கம்பிகள்.. நடவடிக்கை எடுக்கப்படும் - மின்சாரத்துறை அமைச்சர், உறுப்பினர் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ கேள்விக்கான பதிலில்..

சசிகலா வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு

சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி பன்னீர்செல்வம், பழனிசாமி தாக்கல் செய்த மனு மீது வேறு ஒருநாளுக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை - ஆர்பிஐ ஆளுநர் அறிவிப்பு

வங்கிகளின் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றும், ரெப்போ விகிதம் 4 சதவிகிதமாக நீடிக்கும் என  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

கிராமங்களுக்கு நடமாடும் மருத்துவமனை சேவை - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்க நடமாடும் மருத்துவமனைகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.70 கோடியில் 389 மருத்துவ வாகனங்களை சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நடமாடும் மருத்துவமனையில் தலா ஒரு மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர் பணியில் இருப்பர்.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் 43 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் 43 பேர் உயிரிழப்பு

விருதுநகர் பாலியல் வழக்கில் 4 சிறுவர்களுக்கு ஜாமீன்

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 சிறுவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இளைஞர்கள் நீதி குழும நீதிபதி மருதுபாண்டியன் ஜாமீன் வழங்க உத்தரவிட்டார். 

தூத்துக்குடி அனல் மின் நிலையம் : நான்கு பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 2,3,4,5 ஆகிய நான்கு பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தம். முதலாவது பிரிவில் மட்டும்  மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது

இலங்கையிலிருந்து அகதிகளாக 4 பேர் தனுஷ்கோடி வருகை!

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து அகதிகளாக 4 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர். 

உலகளவில் 49.61 கோடி பேருக்கு கொரோனா

உலகளவில் இதுவரை 49.61 கோடி பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், 61. 94 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 

2வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் 2வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110. 85, டீசல் ரூ.100. 94க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

IPL 2022 : ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் - குஜராத் மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Background

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது எனக்கூறிய அந்நாட்டு உச்சநீதிமன்றம் 9ஆம் தேதி மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தீர்ப்பு அளித்தது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.