Breaking News LIVE: இலங்கை தமிழர்களுக்கு உதவுங்கள் - வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கோரிக்கை
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வைக் குழு தலைவரை மாற்ற வேண்டும் என்று கேரள அரசு கோரிக்கை வைத்த நிலையில், அந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. அணை பாதுகாப்பு, பராமரிப்பு பணிகள் என அனைத்தையும் மேற்பார்வைக்குழுவே முடிவு செய்யும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை பெத்தல் நகர் மக்கள் கூடுதல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்
கரூர் மாவட்டத்தில் வரும் 18ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் - மாவட்ட ஆட்சியர்
* அரசு அலுவலகம், பொதுத்துறை நிறுவனங்கள், டாஸ்மாக், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் ஹெல்மெட் கட்டாயம்
நாடாளுமன்ற மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - சபாநாயகர் ஓம் பிர்லா
நூலகங்களுக்கு குளிர்சாதன வசதி கோரிக்கை வந்துள்ளது: ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
முல்லை பெரியாறில் புதிய அணை அமைப்பது பற்றி யாரும் இப்போது பேச வேண்டாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய 7.5% சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும் இந்தச் சட்டத்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ. 4,859க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.38,872க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மருத்துவ மாணவர்கள் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு எதிரான வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி பயணம் செய்கிறார். கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் சென்று வந்த நிலையில் இன்று திடீரென ஆளுநர் டெல்லி பயணம் செய்துள்ளார்.
Background
மின்சார சீர்த்திருத்த பதவிகளுக்காக தமிழகத்திற்கு ரூ 7,054 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு மருத்துவ மாணவர்கள் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டை வழங்கியிருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டிருந்தது. அந்த வழக்கு மீதான விசாரணை முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று அந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -