Breaking News Live: நிதிநிலை அறிக்கை விளக்கக்கூட்டத்தில் முதல்வர் விளக்க உரை..!

Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

ABP NADU Last Updated: 10 Apr 2022 06:20 PM
7 ஓவர்களில் 51 ரன்கள்..! களத்தில் ஸ்ரேயாஸ்- நிதிஷ் ராணா..!

டெல்லி அணி நிர்ணயித்த 216 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் கொல்தகதா அணி 7 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்களை எடுத்துள்ளது. களத்தில் ஸ்ரேயாஸ் அய்யரும், நிதிஷ் ராணாவும் உள்ளனர்.

5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது

திருநீறு, குங்குமம் தயாரிப்பு பணியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

திருக்கோயில்களில் திருநீறு, குங்குமம் தயாரித்து வழங்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.  திருவேற்காடு கோயிலில் இருந்து மதுரை, திருச்சி உள்ளிட்ட 8 கோயில்களில் காணொலி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த 8 கோயில்களில் தயாரிக்கப்படும் திருநீறு, குங்குமம் தமிழகத்தின் பிற கோயில்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

இந்தியாவில் ஒரே நாளில் 1,054 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,054 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 29 பேர் உயிரிழப்பு. 1,258 பேர் குணமடைந்தனர்.

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு

கோடை வெயில் அதிகமாக இருக்கும்போது தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும், இரண்டாம் போட்டியில் ராஜஸ்தான் அணியும், லக்னோ அணியும் மோத உள்ளன.


 

இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையிலா தீர்மானம் நிறைவேறியதால், பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது

இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி

18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய அனைவரும் வரும் இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்கா? இல்லையா? - இன்றைய நிலவரம் இதுதான்

சென்னையில் 4வது நாளாக இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மாற்றமின்றி 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு மாற்றமின்றி 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Background

பாசப்பிணைப்புடன் உருவாக்கப்பட்ட இயக்கம் திமுக என முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.


எதிர்கட்சியாக இருந்த போதே நாடாளுமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றது: முதல்வர்


 


பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை காணொளியில் பேசுகிறார். 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி 3 ஆவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


தமிழ் மென்பொருள் கருவிகளை உருவாக்க முடிவு செய்து தமிழ் இணைய கல்விக்கழகம் விருப்பம் கோரியுள்ளது. 


திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் தேர்வு கட்டணம் 75 ரூபாயில் இருந்து 125 ரூபாயாக உயர்த்தப்பட்ட நிலையில், அங்கு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பல்கலைகழக துணைவேந்தர் கட்டண உயர்வை நிறுத்தி வைத்து, கடந்தாண்டு பருவ தேர்விற்கு செலுத்திய தேர்வு கட்டணத்தையே மாணவர்கள் செலுத்தலாம் என்று கூறியிருக்கிறார். 


இந்தியாவில் கடந்த 130 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே விலையில் நீடித்து வந்தது. இந்த நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல்கள் முடிவுகள் வெளியான நிலையில் சென்னையில் கடந்த 16 நாட்களில் 14ஆவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன. 


இந்த நிலையில், சென்னையில் 4வது நாளாக இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மாற்றமின்றி 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு மாற்றமின்றி 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.