Breaking Tamil LIVE: மதுரையில் பல இடங்களில் பெய்து வரும் மழை
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
கோடை வெயில் கொளுத்தி வரும் சூழலில், மதுரையில் பல பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது.
மதுபானக் கொள்கை விவகாரத்தில் முறைகேடு செய்ததாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தது. இந்நிலையில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக நாளை மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாலியல் வழக்கில் ரேவண்ணா நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அவரது ஜாமின் மனு குறித்து நாளை காலை பதிலளிக்க போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உதகையில் 126வது மலர்க்கண்காட்சி மே 10 ஆம் தேதி முதல் மே 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது - இதனை முன்னிட்டு மே 10 ஆம் தேதி அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு சென்ற பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 4 இயந்திரங்களும் சேதம் - தீப்பிடித்தவுடன் அதிகாரிகள் உயிர் தப்பினர்.
மத்தியப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு சென்ற பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 4 இயந்திரங்களும் சேதம் - தீப்பிடித்தவுடன் அதிகாரிகள் உயிர் தப்பினர்.
மறைந்த நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எலும்பு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதால் மதுரை மண்டல தடயவியல் அலுவலகத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமிர்தசரஸ் முன்னாள் துணை மேயர் அவினாஷ் ஜாலி ஆம் ஆத்மி கட்சியில் இருந்து செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
சேலம் அருகே உத்தழசோழபுரம் என்ற இடத்தில் கார், டிராக்டர், லாரி ஆகிய வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை சௌகார்பேட்டையில் ஓபியம் என்ற போதைப்பொருள் வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் ரொக்கம், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இருதரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு மாணவன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோதல் தொடர்பாக மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று அதிகாலை 4:55 மணிக்கு அருணாச்சலப் பிரதேசத்தின் கீழ் சுபன்சிரியில் ரிக்டர் அளவுகோலில் 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரியில் வசிந்து வந்த தென்னிந்தியாவின் முதல் பாஜக எம்.எல்.ஏ.வான சி.வேலாயுதம் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் 1996 ஆம் ஆண்டு பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
அடுத்த 3 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தர்மபுரி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், சேலம், கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி ஆகிய 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் அலுவலகத்தில் நடைபெறுகிறது - ஏற்கனவே இந்த சம்பவத்தில் 21 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை, 2 காவலர்களுக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
Background
- தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் சற்று ஆறுதலடைந்துள்ளனர். மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சென்னையில் இரவு நேரங்களில் கடந்த இரு வாரங்களாக குளிர்காற்று வீசி வந்த நிலையில் இன்று அதிகாலை பல இடங்களிலும் மழை வெளுத்துவாங்கியது. சில நிமிடங்கள் பெய்தாலும் வெப்பம் தணியும் அளவுக்கு மழை இருந்தது. காலை தூங்கி எழுந்த மக்கள் மழை பெய்ததை கண்டு ஆச்சரியப்பட்டனர்.
- ஐபிஎல் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ராஜஸ்தான் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து இன்று நடக்கும் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வென்றால் பிளே ஆஃப் ஆட்டத்தில் நீடிக்கலாம் என்பதால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழ்நாட்டில் இன்று முதல் வெயில் தாக்கம் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இன்றும் நாளையும் நெல்லை, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -