Breaking Tamil LIVE: ஜாபர் சாதிக் விவகாரத்தில் இரையாகியுள்ளேன் - அமீர்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
ஜாபர் சாதிக் விவகாரத்தில் இரையாகியுள்ளேன் என்று அமீர் கூறியுள்ளார்.
ஜெயக்குமார் தனசிங்கின் முகம் கை, கால்கள் இரும்புக்கம்பியால் சுற்றப்பட்டு இருந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
மே 16ம் தேதி முதல் 12ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பபிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் குந்து கால் கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம். காணாமல் போன சிறுவனை மீனவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த மாதம் தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட ரூபாய் 4 கோடி கைப்பற்றப்பட்டதன் அடிப்படையில், பணத்தை வைத்திருந்த கோவர்தனுக்கு நீலாங்கரையில் உள்ள வீடு மற்றும் ஹோட்டலில் சி.பி.சி.ஐ.டி சோதனை நடத்தினர்.
சென்னையில் மின்தேவை புதிய உச்சமாக 97.77 மில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லையில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாமின்கோரி எச்.டி. ரேவண்ணா மீண்டும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளார். பெண் கடத்தல் வழக்கில் ரேவண்ணாவை காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் சிறுமியை கடித்த 2 ராட்வெய்லர் நாய்கள் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன. நாய்களின் உரிமையாளர் புகழேந்தி தனது மகனின் வீட்டிற்கு நாய்களை அனுப்பி வைத்தார். 7 நாள்களில் நாய்களை அகற்ற வேண்டும் என நேற்று சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
தமிழ்நாடு முழுவதும் நேற்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகிறது.
மாஸ்கோவில் மீண்டும் ரஷ்ய அதிபராக புதின் இன்று பதவியேற்க உள்ளார். அதிபர் தேர்தலில் 88% வாக்குகள் பெற்று 5வது முறையாக ரஷ்ய அதிபராக ரஷ்ய அதிபராகிறார் புதின். தற்போது 71 வயதாகும் புதின் அடுத்த 6 ஆண்டுகளுக்கு ரஷ்ய அதிபராக பதவி வகிப்பார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை மே 13 முதல் ஜூன் 30 வரை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அரியலூர் மாவட்டத்துக்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை:
கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை.
Background
- மக்களவை தேர்தலுக்கான 3ம் கட்ட தேர்தல் குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் மக்களவைத் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார் பிரதமர் மோடி. முன்னதாக வாக்குச்சாவடிக்கு சில நூறு மீட்டர்களுக்கு முன்பாகவே வாகனத்தை நிறுத்திவிட்டு, நடந்தே வாக்குச்சாவடிக்கு சென்றார். அவருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனிருந்தார். அவர்களை காண சாலையின் இரண்டு புறமும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் பிரதமர் மோடியின் உருவப்படம், பாஜகவின் சின்னமான தாமரை படம் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். அந்த பதாகைகளில் சிலருக்கு பிரதமர் ஆட்டோகிராஃபும் போட்டுக் கொடுத்தார். தொடர்ந்து வாக்குச்சாவடிக்குள் சென்ற பிரதமர் மோடி, தேர்தல் அதிகாரிகளிடம் தனது ஆவணங்களை காட்டி, பிறகு வாக்களித்தார். பின்பு வெளியே வந்து பொதுமக்களை நோக்கி கையசைத்தார்.
- கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமோக வெற்றி பெற்று 10 வருடங்களுக்குப் பின் ஆட்சியில் அமர்ந்தது. மே 7 ஆம் தேதி முதலமைச்சராக முதல் முறையாக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இன்றோடு திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த காலக்கட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என வீடியோ வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் பேசினார்.
- தமிழ்நாட்டில் நேற்று 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இன்று (07.05.2024) காலை 11 முதல் மே 11 ஆம் தேதி மாலை 5 மணி வரை விடைத்தாள் நகல் கோரியும், மறுமதிப்பீடு வேண்டியும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாக மாணவ, மாணவியர்களும்,தேர்வெழுதிய மையங்கள் வழியாக தனித்தேர்வர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளரான சுனிதா வில்லியம்ஸின், மூன்றாவது விண்வெளிப்பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விண்வெளிப் பயணம் தொடங்கவிருந்த சில மணி நேரத்திற்கு முன்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் எப்போது இந்த திட்டத்தின்படி, விண்வெளிப்பயணம் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -