Breaking Tamil LIVE: கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெற இணையதள முகவரி அறிவிப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
கொடைக்கானல் செல்ல இ - பாஸ் பெற இணையதள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று வெயிலானது, 16 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.
நாடு முழுவதும் 557 நகரங்களில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கியது - தமிழ்நாட்டில் மட்டும் 1.50 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
கள்ளக்கடல் நிகழ்வு காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் திருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகளவு பக்தர்கள் வருகை தந்துள்ள நிலையில் கடற்கரை பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் வெப்ப நிலை குறைய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் புகாரில் சிக்கி வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் துபாயில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.
பாலியல் புகாரில் சிக்கி வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் துபாயில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.
பாலியல் புகாரில் சிக்கி வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் துபாயில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.
மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் எழுதியதாக மற்றொரு கடிதம் வெளியானது. அதில் தனக்கு 16 நபர்கள் லட்சக்கணக்கான பணம் பாக்கி வைத்துள்ளதாகவும், அதற்காக பழி வாங்க வேண்டாம் எனவும் தன் மருமகன் ஜெயபாலுக்கு எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகி கோவர்த்தனிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டுக்கு சென்று விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் உடலுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை அஞ்சலி செலுத்தினார். ஜெயகுமார் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது, காவல்துறை விசாரணை நடப்பதோடு கட்சி ரீதியாகவும் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் - இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டாஸ்மாக் ஊழியர் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது - 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மே 7 முதல் 9 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னையில் செவிலியராக பணியாற்றி வரும் இளம்பெண் தனக்கு தானே பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்த விவகாரத்தில் அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். பிரசவத்தின் போது கால்களை தவறுதலாக வெட்டியதால் குழந்தை இறந்தது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தலில் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது - இதனை முன்னிட்டு விறுவிறுப்பாக நடந்து வந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
Background
- நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. மொத்தம் 557 தேர்வு மையங்களில் நடக்கும் நீட் தேர்வை 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். மதியம் 2 மணிக்கு தொடங்கும் தேர்வானது மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியை தரம்சாலா மைதானத்தில் எதிர்கொள்கிறது. ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற போட்டியில் தோற்ற சென்னை அணி அதற்கு பதிலடி கொடுக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியின் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கலாம் என்பதால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் மற்றொரு போட்டியில் லக்னோ - கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.
- போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் நேற்று கோவை காவல்துறையால் கைது செய்யபட்டார். தேனியில் கைது செய்யப்பட்ட அவரை கோவை அழைத்து வரும்போது வாகனம் விபத்துக்குள்ளானது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு கோவை கொண்டு செல்லப்பட்ட சவுக்கு சங்கருக்கு மே 17 ஆம் தேதி நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சில இடங்களில் தமிழ்நாட்டில் மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -