Breaking Tamil LIVE: பேரணியில் குழந்தைகள் பங்கேற்றதாக புகார்; மத்திய அமைச்சர் அமித்ஷா மீது வழக்குப்பதிவு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்

ஆர்த்தி Last Updated: 03 May 2024 09:17 PM
பேரணியில் குழந்தைகள் பங்கேற்றதாக புகார்; மத்திய அமைச்சர் அமித்ஷா மீது வழக்குப்பதிவு

தெலங்கானாவில் தேர்தல் பேரணியில் குழந்தைகள் பங்கேற்றதாக புகாரையடுத்து, மத்திய அமைச்சர் அமித்ஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கொடைக்கானல் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்பினார்

ஓய்வுக்காக கொடைக்கானல் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்பினார்.

வாக்குப்பதிவு முரண்பட்ட புள்ளி விவரங்கள் கவலை அளிக்கிறது - தலைமைத் தேர்தல் ஆணையருக்கு சீதாராம் யெச்சூரி கடிதம்

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான முரண்பட்ட புள்ளி விவரங்கள் கவலை அளிக்கிறது என்று மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ADMK: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் கேவியட் மனுவை தாக்கல் செய்தது அதிமுக!

சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையில் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்கவேண்டும் என அதிமுக தரப்பில் உச்சநீதிமனறத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

TN 43 பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ- பாஸ் தேவையில்லை

TN 43 பதிவெண் கொண்ட வாகனங்கள் ஊட்டிக்கு செல்ல இ - பாஸ் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

விருதாச்சலம்: ரயிலில் தவறிவிழுந்த கர்பிணிப் பெண்ணின் உடல் ஒப்படைப்பு!

விருத்தாசலத்தில் ரயிலில் சென்றுகொண்டு இருந்த கர்ப்பிணிப் பெண் தவறிவிழுந்து உயிர் இழந்ததையடுத்து அவரது உடல், பிரேத பரிசோதனைக்குப் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Rahul Gandhi Nomination : ரேபரேலி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி

அமேதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா வேட்புமனுத் தாக்கல்

அமேதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

Prajwal Revanna FIR : ஆபாச வீடியோ விவகாரம் : ப்ரஜ்வால் ரேவண்ணா மீது மற்றுமொரு வழக்குப்பதிவு..

சந்தேஷ்கலி தலித் சகோதரிகளுக்கு அநியாயம் நேர்ந்துள்ளது. குற்றவாளி ஷாஜஹான் என்பதால் தண்டனை இல்லையா? - மோடி பிரச்சாரம்

Breaking Tamil LIVE:தேவகவுடா மகன் எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன் எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது - பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரணைக்கு அனுப்பாமல் கடத்தியதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. 

Naan Mudhalvan Scheme : என் கனவு திட்டமாக தொடங்கிப் பலரது கனவுகளை நனவாக்கி வரும் நான் முதல்வன் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளப் பதிவு

Amethi Kishori lal sharma : கிஷோரி லால் ஷர்மா அமேதியில் இருந்து போட்டியிடுகிறார்.. அவரை உங்களுக்கு 40 வருடங்களாக தெரியும் - ப்ரியங்கா காந்தி

PM Modi In West Bengal : மேற்கு வங்க பர்தமான் - துர்காபூரில் பரப்புரை மாநாட்டில் பேசும் பிரதமர் மோடி

Rahul Gandhi Nomination : இன்று ரேபரேலியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி

Breaking Tamil LIVE: ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழப்பு - விசாரணைக்கு உத்தரவு

சென்னையில் இருந்து கொல்லம் சென்ற விரைவு ரயிலில் தவறி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழப்பு - அபாய சங்கிலி வேலை செய்யவில்லை என உறவினர்கள் புகாரளித்ததால், விசாரணை நடத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கொல்லம்  சென்றவுடன் ரயிலில் அபாய சங்கிலிகளை சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

Breaking Tamil LIVE : மக்களவை தேர்தல்: பிரியங்கா காந்தி போட்டியில்லை..!

மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரியங்கா காந்தி இந்த முறையும் போட்டியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Breaking Tamil LIVE : ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி..!

உத்தரபிரதேசம் ரேபரேலி  தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


Background

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் முதலே வெயிலின் தாக்கம் கொடூரமாக உள்ளது. எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெப்பநிலை அதிகபட்சமாக பதிவாகி வருகிறது. வழக்கமாக அக்னி நட்சத்திரத்தின் போது தான் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் ஆனால் இந்த ஆண்டு சற்று மாறாக ஏப்ரல் முதலே 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில், கரூர் பரமத்தியில் 44.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 


இன்றும் நாளையும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இயல்பை விட 9 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு இன்றும் நாளையும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 3 ஆம் கட்டம் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மொரேனாவில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ”எனது தந்தை ராஜீவ் காந்தி உயிர் தியாகத்தை தான் அவரது தாயாரிடமிருந்து வாரிசு உரிமையாக பெற்றாரே தவிர, சொத்துக்களை அல்ல. இதை மோடி புரிந்துகொள்ளமாட்டார். இந்திரா காந்தி போன்ற பெண்ணைப் பற்றி மோடி முட்டாள்தனமாக பேசும்போது, ​​​​ வம்ச அரசியலை மட்டுமே பார்க்கிறார். எங்களது குடும்பம் செய்த தியாகத்தை புரிந்துகொள்ளமாட்டார்” என ஆவேசமாக பேசியுள்ளார்.  இதற்கிடையில் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம். 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.