Breaking LIVE : நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
6-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நிறைவு
6-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவுபெறுகிறது.
52 கிராம் குறைந்ததற்கு ரூ.60,000 அபராதம். கேரளா திருச்சூரில், பிரிட்டானியா நியூட்ரி சாய்ஸ் பாக்கெட்டில் 300 கிராம் என அச்சிடப்பட்டு, 52 கிராம் குறைவாக இருந்ததால் நீதிமன்றத்தை நாடினார் ஜார்ஜ் என்பவர். இப்போது அந்நிறுவனத்துக்கு ரூ.60000 நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
சவுக்கு சங்கர் எதிர்காலத்தில் எப்படி நடந்துகொள்வார் என்னும் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு. எப்படியெல்லாம் செயல்படமாட்டார் என பட்டியலிட்டு அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Courtallam Falls : பழைய குற்றாலத்தில் குளிப்பதற்குக் கட்டுப்பாடு
பழைய குற்றாலத்தில் காலை 6 மணிமுதல், மாலை 5.30 மணிவரை மட்டுமே குளிப்பதற்கு அனுமதி. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர், குற்றாலத்தில் நேரில் ஆய்வு நடத்தினர்
Nifty : வியாழக்கிழமையான இன்று (23.05.2024) ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம் : நிப்டி 22,800.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் இந்திராநகர் 7வது வீதியை சேர்ந்தவர் மாரிமுத்து இவருடைய மகன் நவீன்குமார்(27) கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது வீட்டின் மாடி மீது செல்போன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது வீட்டின் மாடி முன்பு இருந்த மின்கம்பி மீது கைகள் பட்டு உள்ளது.
இதில் அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசி வீசப்பட்டுள்ளார். இதை அடுத்து இவருடைய அலறல் சத்தம் கேட்டு வீட்டின் அருகில் இருந்தவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து தகவல் அறிந்த நகர காவல் துறை போலீசார் நவீன் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மே 4 ஆம் தேதி அவர் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடிக்கு இந்தியில் மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு - போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்றிரவு பெய்த மழை காரணமாக கல்லாறு - ஹில்கிரோவ் இடையே ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. நேற்று மலை ரயில் சேவை துவங்கிய நிலையில், மீண்டும் மண் சரிவால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குமரி, நெல்லை, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் குமரி மாவட்டம் மைலாட்டில் அதிகபட்சமாகம் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பதிவாகி வரும் நிலையில், இன்று காலை 10 மணி வரை நாகப்பட்டினம், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Background
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. இன்னும் 2 கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகளானது வரும் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் பேட்டியளித்த டெல்லி முதலமைச்சர் ஜெஜ்ரிவால், எதிர்க்கட்சி கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை என தெரிவித்தார். இந்திய அணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில், சமூக வலைத்தள பிரபலமான இர்ஃபான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவ இயக்குநரை நேரில் சந்தித்து இர்ஃபான் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை டி.எம்.எஸ் வளாகத்திற்கு நேரடியாக சென்று மருத்துவ மற்றும் ஊரக நலப்பணி இயக்குநரை சந்தித்து மன்னிப்பு கடிதம் கொடுத்து மன்னிப்பு கோரியதாக கூறப்படுகிறது. அவரின் மன்னிப்பு கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இர்ஃபானுக்கு நிபந்தனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அதாவது கருக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை இர்ஃபான் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -