Breaking News LIVE: நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
ISRO Somnath On Temples : கோயில்களில் நூலகங்கள் அமைக்கப்பட வேண்டும் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
கோயில்கள் என்பது வயதில் மூத்தவர்கள் நாம ஜெபம் செய்வதற்கான இடமாக இருக்கக்கூடாது. மாறாக இளைஞர்கள் நாடி வரும் இடமாகவும் இருக்க வேண்டும். அதனால் நூலகங்கள் கோயில்களில் அமைக்கப்பட வேண்டும். மேலும் கோயில்கள் சமூக மாற்றத்துக்கான இடமாகவும் இருக்கவேண்டும் - ஸ்ரீ உதியனூர் தேவி (Sree Udiyanoor Devi Temple) கோயிலில் தரிசனத்துக்குப் பின் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு
நாளை மறுநாள் 5ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் 5ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆணைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுவதால், நீர்வரத்து அதிக அளவு வர வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு கருதி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளித்திடவும் படகு பயணம் மேற்கொள்ளவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உள்ள அட்டகட்டி 16 கொண்டை ஊசி வளைவில் மழை காரணமாக பாறைகள் சரிந்து விழுந்தது.
சாலையில் பாறைகள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது
சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மணிமுத்தாறு, மாஞ்சோலை அருவிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று (18.05.2024) இலங்கை நாட்டில் பதிவு எண் கொண்ட மீன்பிடி படகு ஒன்று 7 மீனவர்களுடன் இந்திய கடல் எல்லைக்குள் (கன்னியாகுமரி கடல் பகுதியில்) அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக தூத்துக்குடி இந்திய கடலோர காவல் படையைச் சேர்ந்த Vaibhav Ship படையினரால் கைது செய்யப்பட்டனர்.
தோல்வி பயத்தில், பிரதமர் மோடி பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய் பரப்புரை - பொழுதொரு வெறுப்பு விதை எனப் பிரதமர் மோடி பேசி வருகிறார் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொருட்களை பெரம்பலூர் அருகே போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிரதமரின் பொறுப்பற்ற பேச்சுகளையும் - அதனைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் அமைதியையும் நாட்டு மக்கள் அதிர்ச்சியோடும் வேதனையோடும் பார்த்து வருகிறார்கள் - முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
சென்னையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது - சென்னை வானிலை மையம்
கோடை விழாவை முன்னிட்டு கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா மே 26-ம் தேதி காலை7 மணி முதல் இரவு 7 மணி திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பூங்க திறந்திருக்கும் நிலையில் கோடை விழாவுக்காக மூன்று மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பழைய குற்றால அருவி மற்றும் மெயின் அருவிகளின் நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பழைய குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் குளித்துக்கொண்டிருந்த 17 வயது சிறுவன் நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான்.
இதையடுத்து பழைய குற்றாலம், மெயின் அருவிகளின் நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. a
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19,20,21 ஆகிய மூன்று நாட்களில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் 18,22 ஆகிய நாட்களில் ஆரஞ்சு அல்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி., ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச்செயலர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், டெல்லி போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
நாகப்பட்டினம், இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து நாளை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் பயணத்திட்டம் தற்காலிமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத கடல் போக்குவரத்து விதி மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக திட்டமிட்ட கப்பல் போக்குவரத்தை தொடங்க முடியவில்லை என கூறப்பட்டுள்ளது. முன்பதிவு செய்துள்ள பயணிகள் தங்களது பயணத் தொகையை திரும்ப பெற்றுக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 3.36 கோடி ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். வார இறுதியான வெள்ளிக்கிழமை அன்று, 71 ஆயிரத்து 510 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் மழை பெய்ய வாய்ப்பு. நெல்லை, கன்னியாகுமரியிலும் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு
கிர்கிஸ்தானில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து அங்குள்ள் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தூதரகம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக கிர்கிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ”நாங்கள் எங்கள் மாணவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். தற்போது நிலைமை அமைதியாக உள்ளது, ஆனால் மாணவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தூதரகத்தை தொடர்பு கொள்ளவும்” என தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் 3 நாட்களுக்கு நீலகிரி பயணத்தை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தோல்வி பயத்தில் பிரதமர் மோடி நாளொரு பொய் பரப்புரை செய்து வருகிறார் என்றும், பிரதமரின் பொறுபற்ற பேச்சையும் அதனை கண்டிக்கும் தேர்தல் ஆணையத்தில் அமைதியையும் மக்கள் அதிர்ச்சியுடனும் வேதனையுடனும் காணுகின்றனர் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 6,850க்கும் சவரன் ரூ.54,800க்கும் விற்பனையாகிறது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுடன் புறநகரில் உள்ள 50 ஊராட்சிகளை சேர்த்து இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சென்னை மாநகராட்சி 250 வார்டாக விரைவில் உயரும். இதற்கான அறிவிப்பு இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருகின்ற மே 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி தொடங்குகிறது என சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
Background
நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் ஐந்தாம் கட்டத்தில், 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில், ஐந்தாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதில் பீகாரைச் சேர்ந்த 5 தொகுதிகள், ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த ஒரு தொகுதி, லடாக் தொகுதி, ஜார்கண்டைச் சேர்ந்த 3 தொகுதிகள், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 13 தொகுதிகள், ஒடிசாவைச் சேர்ந்த 5 தொகுதிகள், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 14 தொகுதிகள் மற்றும் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
இந்நிலையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித் ஷா மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் இன்று பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -