Breaking News LIVE : சுதந்திரத்துக்கு பின் காங்கிரஸ் கலைக்கப்பட்டிருந்தால், நாடு முன்னேறியிருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
சுதந்திரத்துக்கு பின் காங்கிரஸ் கலைக்கப்பட்டிருந்தால், நாடு முன்னேறியிருக்கும் - பிரதமர் மோடி
வென்றால், அமித்ஷாவை பிரதமர் ஆக்குவார்கள் - மும்பையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
Laos and Cambodia MEA : கலிஃபோர்னியாவிலும், தென்கிழக்கு ஆசியாவுக்கும் போகாதீர்கள் : வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்
டெல்லி உயர்நீதிமன்றத்தில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. எனினும் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு கோடைக்கால விடுமுறைக்கு பிறகு, ஜூலை மாதம் விசாரிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜூன் 14ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. மே 5ஆம் தேதி நீட் தேர்வு நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது
மேற்குத் தொடர்ச்சி மலை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் திடீரென வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக அஸ்வின் என்ற சிறுவன் அடித்துச் செல்லட்டார். இவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் அஸ்வின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக தென்காசி பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுதியுள்ளது.
தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீர்காழி அடுத்த மங்கைமடத்தில் தெருநாய்கள் கடித்ததில் 2 சிறுவர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மக்களவைத் தேர்தலுக்காக வட மாநிலங்களில் பரப்புரை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள கோடம்பாக்கம் மற்றும் மேற்கு மாம்பலத்தில் மழை பெய்து வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை விமான நிலையத்தில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. விடியா திமுக ஆட்சியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம் குறித்து தொடர்ச்சியாக நான் எச்சரித்து வந்தும், இந்த விடியா அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, திமுக அயலக அணி நிர்வாகியாக இருந்த ஒருவர், சர்வதேச போதைப்பொருள் மாபியாவாக இருந்த செய்தியே வந்து சேர்ந்தது.
தற்போது, சிந்தெடிக் போதைப்பொருட்களை கடத்துபவர்கள் எவ்வித அச்சமுமின்றி தமிழ்நாட்டை போதை பொருள் மையமாக மாற்றி இருப்பதற்கு இந்த விடியா அரசே காரணியாக உள்ளது , சிந்தெடிக் போதைப்பொருட்களின் புகலிடமாக தமிழ்நாட்டை மாற்றிய விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதுடன், இனியாவது போதைப்பொருள் தடுப்பில் விழிப்புடன் துரிதமாக செயல்படுமாறு இந்த விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டிவிட்டர் பக்கம் மர்ம நபர்களால் முடக்கபட்டுள்ளது. இதுதொடர்பாக டிவிட்டர் நிர்வாகத்தை அணுகியுள்ளதாகவும், விரைவில் கணக்கு மிட்கப்படும் எனவும் மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று பரப்புரை மேற்கொள்கின்றனர்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனிடையே மதுரை மதிச்சியம் பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பாலசுப்பிரமணியன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Background
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள கடம்பூர் மேற்கு காடு பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் குடோனில் இருந்த பட்டாசு முற்றிலும் வெடித்து சிதறியதோடு கட்டடமும் இடிந்து விழுந்தது. இந்த தீ விபத்தில் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் இன்று முதல் மலர் கண்காட்சி தொடங்குகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு சேவல், மயில், வீடு, இதழ் போன்ற உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் மலர்கள் கண்காட்சியில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் செல்ஃபி எடுக்க வசதியாக “ஐ லவ் கோடை” என்ற இடமும் அமைக்கப்பட்டுள்ளது.
- கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பயணிகள் கூட்டத்தை கருத்தில் கொண்டு இன்று முதல் சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் ரயிலில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த கூடுதல் பெட்டி மே 17 முதல் 23 ஆம் தேதி வரை பயன்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் மும்பை, லக்னோ அணிகள் மோதுகின்றது. நேற்று நடைபெறவிருந்த குஜராத், ஹைதராபாத் இடையேயான ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -