Breaking News LIVE: இந்தியா வேகமாக முன்னேறுகிறது.. யாரும் நம்மை தடுக்க முடியாது - ராஷ்மிகா மந்தனா
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
Savukku Shankar Judicial Custody : சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
பெண்காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் : காவல் முடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பிரதமர் மோடிக்கு எதிரான வெறுப்பு பேச்சு குற்றச்சாட்டு: தகுதிநீக்க மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
பெண்களுக்கு எதிராக சர்ச்சை கருத்து பதிவிட்ட விவகாரத்தில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி பாஜக முன்னாள் நிர்வாகி எச்.ராஜா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி எச்.ராஜாவின் வாதத்தை ஏற்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், அவரின் மனுவை தள்ளுபடி செய்தனர்
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
ஐபிஎல் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே 21 ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 2வது தகுதிச்சுற்றுக்கான டிக்கெட்டுகள் ரூபே கார்டு வைத்திருப்பவர்களுக்கு இன்றும், மற்றவர்களுக்கு நாளையும் மாலை 6 மணிக்கு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30வது கூட்டம் அதன் தலைவர் ஹல்தர் தலைமையில் வரும் மே 21 ஆம் தேதி கூடுகிறது. டெல்லியில் பிற்பகல் 2.30 மணிக்கு கூடுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30வது கூட்டம் அதன் தலைவர் ஹல்தர் தலைமையில் வரும் மே 21 ஆம் தேதி கூடுகிறது. டெல்லியில் பிற்பகல் 2.30 மணிக்கு கூடுகிறது.
தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார். மக்களவை தேர்தல் பரப்புரையின் போது தயாநிதி மாறன் தொகுதி நிதியை பயன்படுத்தியது தொடர்பாக இபிஎஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
தேர்வு எழுதியவர்களில் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மாணவிகள் 94.69 சதவிகிதமும், மாணவர்கள் 87.26 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 8 பேர் தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற, 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 91.17 சதவிகிதம் அதாவது தேர்வு எழுதியவர்களில் 7.39 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்த வெளி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வெப்பம் காரணமாக தொழிலாளர் உடல்நலம் பாதிப்பதை தடுக்கும் வகையில் நடவடிக்கை என தொழிலக பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது
ஐதராபாத் அணிக்கு எதிரான மோசமான தோல்வியை தொடர்ந்து, லக்னோ அணி உரிமையாளர் கோயங்கா, கேப்டன் கே.எல். ராகுலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இதனால், கே.எல். ராகுல் அந்த அணியில் தொடரமாட்டார் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், “இரண்டு கிரிக்கெட் பிரியர்களிடையே நடந்த வலுவான விவாதத்தில் எனக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை இது ஒரு டீ கப்பில் ஏற்பட்ட புயல்தான். மேலும் நாங்கள் இப்படியான வலுவான விவாதத்தை விரும்புகிறோம். அணி சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறோம். இதனால் இது எங்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை கிடையாது” என லக்னோ அணியின் உதவி பயிற்சியாளர் லான்ஸ் க்ளூஸ்னர் பேசியுள்ளார்.
சென்னை சௌகார்பேட்டையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பணம் கொண்டு சென்ற தனியார் நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி கோயில்களில் கணவர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நடிகை நயன்தாரா!
கன்னியாகுமரியில் உள்ள பிரபல கோயில்களில் நடிகை நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார். நேற்று மாலை இருவரும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள நாகராஜ கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி சாமி தரிசனம் செய்தனர்.
காற்றின் திசை மாறுபாடு மற்றும், குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ளன. இதில் தோல்வியுறும் அணி, நடப்பு தொடரில் இருந்து வெளியேறுவது உறுதியாகும்.
கரூர் ஆண்டான்கோவில் அருகே என்.புதூரில் கிணற்றில் குளித்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை விளையாடச் சென்றவர்கள் வீடு திரும்பாததால், பல இடங்களில் பெற்றோர்கள் தேடி வந்தனர். சிறுவர்கள் அஸ்வின்(12), மாரிமுத்து(13), விஷ்ணு(13) ஆகியோர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
சென்னையில் ஏடிஎம் மையத்துக்கு கொண்டு சென்ற ரூ.37 லட்சத்தை திருடிக்கொண்டு தப்பிய காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார். ஊரப்பாக்கம் ஏடிஎம் காவலாளி குணசேகரனை திருவான்மியூரில் போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்ட்ராவில் வீசிய புழுதி புயலில் விளம்பர பதாகை விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Background
- இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற 4 ஆம் கட்ட வாக்குப்பதிவில் 64% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசங்களில் 4ஆம் கட்ட தேர்தலானது நடைபெற்றது. அதேசமயம் ஆந்திராவில் ஒரே கட்டமாக 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்கள் விறுவிறுப்பாக நடைபெற்றது. 5ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
- ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா - குஜராத் அணிகள் மோதியது. ஆனால் இந்த ஆட்டம் நடைபெற்ற குஜராத் அஹமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் மழை கொட்டி தீர்த்ததால் போட்டி கைவிடப்பட்டது. இதனால் 2 அணிகளுக்கும் ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன்மூலம் குஜராத் அணியை பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது. இன்றைய ஆட்டத்தில் டெல்லி - லக்னோ அணிகள் நேருக்கு நேர் மோதுகிறது.
- தமிழ்நாடு, புதுச்சேரியில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. முன்னதாக மே 6 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவும், மே 10ஆம் தேதி 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியானது. இன்று காலை 9.30 மணிக்கு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -