Breaking News LIVE: ராகுல் காந்தியின் வயதைவிட குறைவான சீட்டுக்களைத்தான் காங்கிரஸ் ஜெயிக்கும் - மோடி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலையில் விபத்தில் சிக்கியுள்ளார்.
ஆந்திராவில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூன் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நந்தியால் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறி அல்லு அர்ஜூன் பேரணியாக அழைத்து சென்றதாக புகார்.
தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 55 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக கோடை மழை 85.6 மி.மீ பதிவாகும் நிலையில் இன்று காலை வரை 38.4 மி.மீ பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தேர்தல் விதிமீறல் குறித்து நடிகர் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நந்தியால் தொகுதியில் நடிகர் அல்லு அர்ஜுன் விதியை மீறி பேரணியாக அழைத்துச் சென்றதாக எழுந்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் பொருளாதார நெருக்கடியின் காரணத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சம் அடைந்துள்ளது.
Background
இந்தியாவில் மக்களவை தேர்தல் திருவிழா கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் வாக்குப்பதிவானது ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ள நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் முதல் கட்டமான ஏப்ரல் 19 ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து விட்டது. இதனிடையே 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 96 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்த 4 ஆம் கட்ட வாக்குப்பதிவில் ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன் மோகனின் தங்கை ஒய்.எஸ். ஷர்மிளா, எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் களம் காண்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பீகாரிலும், மத்திய அமைச்சரான அர்ஜுன் முண்டா ஜார்கண்டில் போட்டியிடுகிறார். அதுமட்டுமல்லாமல் அசாதுதீன் ஓவைசி மற்றும் மத்திய அமைச்சரான கிஷன் ரெட்டி ஆகியோர் தெலங்கானாவில் போட்டியிடுகின்றனர். நாளை நடைபெறும் தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதேபோல் நாளை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -