Breaking News LIVE: ஜாமினில் வெளியே வந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான திரு. அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களுக்கு இடைக்காலப் பிணை அளித்துள்ள மாண்பமை உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை வரவேற்கிறேன். அநீதிக்கு எதிரான இந்த வெற்றி நமது மக்களாட்சியை வலிமைப்படுத்தியுள்ளது.
திரு. அரவிந்த் கேஜ்ரிவால் அவர்கள் சிறையிலிருந்து வெளிவருவது நீதியை அடையாளப்படுத்துவதோடு இந்தியா கூட்டணியையும் பலப்படுத்தியுள்ளது. தேர்தலில் இந்தியா கூட்டணி பெரும் வெற்றி பெறும் வேகத்தை இது கூட்டியுள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின்
அட்சய திருதியை முன்னிட்டு, சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் 3வது முறையாக உயர்ந்துள்ளது.
Arvind Kejriwal Bail : மதுபான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகிக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் நாம் சந்திப்போம் என 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துகள். அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறை சார்ந்த வெற்றிகளை குவித்து வருங்கால சமூகத்தின் சாதனை சிற்பிகளாக வலம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன். விரைவில் நாம் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு, தேனி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பலத்த சூறைக்காற்று காரணமாக பெங்களூரு செல்ல வேண்டிய விமானங்கள் சென்னையில் தரையிறக்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் பலத்த சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் 10 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.
சிங்கப்பூரில் இருந்து பெங்களூர் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் தரையிறப்பட்டுள்ளன. டெல்லி, மும்பை, கோவா, ஐதராபாத், ராஞ்சி, லக்னோவில் இருந்து பெங்களூரு சென்ற விமானங்கள் சென்னையில் தரையிறக்கப்பட்டுள்ளன. 10 விமானங்கள் நள்ளிரவில் பெங்களூரிவில் தரையிறங்க முடியாமல் சென்னைக்கு சென்ற பின் ஒன்றன் பின் ஒன்றாக வந்து தரையிறங்கின. அதிகாலை பெங்களூர் வானிலை சீரடைந்து விட்டது என்ற தகவல் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது.
வானிலை சீரானதையடுத்து சென்னையில் இருந்து 10 விமானங்களும் பெங்களூர் புறப்பட்டு சென்றன.
உதகையில் ஆண்டுதோறும் நடைபெறும் மலர் கண்காட்சி இன்று தொடங்கி நடைபெறுகிறது. 126 வது மலர் கண்காட்சியை காண ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர்.
சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒருவர் கைது செய்துள்ளனர். பட்டாசு ஆலையின் குத்தகைக்காரர் முத்துக்கிருஷ்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
Background
அட்சய திரிதியை நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் விஷேச நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி 2024 ஆம் ஆண்டு அட்சய திரிதியை நாள் இன்று (மே 10) அதிகாலை 4.17 மணிக்கு தொடங்கி நாளை (மே 11) மதியம் 2.50 மணி வரை உள்ளது. அதேசமயம் இந்த இரு நாட்களிலும் நகைகள் வாங்க நல்ல நேரம் காலை 5.45 மணி முதல் மதியம் 12.06 வரை குறிக்கப்பட்டுள்ளது.
22 காரட் மதிப்பு கொண்ட தங்கம் சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் விலை ரூ.45 உயர்ந்து ரூ.6,660 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.90 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் கொண்ட தங்கம் விலை கிராம் ரூ.7,130 ஆகவும், சவரன் ரூ.57,040 ஆகவும் விற்பனையாகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. காலை 9.30 மணிக்கு வெளியாகும் தேர்வு முடிவுகளை, http://tnresults.nic.in அல்லது http://dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் வாயிலாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல், மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.
10 ஆம் வகுப்பு தேர்வினை, 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என, மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதினர். அதோடு, 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதினர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -