Breaking News LIVE: ராமோஜி ராவ் இறுதி ஊர்வலத்தில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு பங்கேற்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு! நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்று கூறிய நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையை 7 மொழிகளில் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஹைதராபாத் ஃபிலிம் சிட்டி நிறுவனர் ராமோஜி ராவ் இறுதி ஊர்வலத்தில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு பங்கேற்பு
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ₹8.5 கோடி மதிப்பிலான 13.5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் கடத்தி வந்த இலங்கை பயணி மற்றும் விமான நிலைய ஊழியரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
தாயை பிரிந்து தவித்த குட்டி யானையை முதுமலை காப்பகத்திற்கு பராமரிப்பிற்காக கொண்டு வந்த வனத்துறை அதிகாரிகள் குட்டி யானையை தாயுடன் இணைக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
இந்துவை கரம்பிடித்த நடிகர் பிரேம்ஜி. திருத்தணி முருகன் கோயிலில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெற்றது!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-4-ல் 6254 பணியிடங்களான கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான போட்டித்தேர்வு இன்று நடைபெறுவதில் விழுப்புரம் மாவட்டத்தில் 200 மையங்களில் 26,578 பேர் விண்ணப்பித்து தேர்வினை எழுதுகின்றனர்.
Tamilnadu Rain : தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்தியா வானிலை மையம் தெரிவித்துள்ளது
TNPSC Group 4 Invalid Mark Method : குரூப் 4 தேர்வில் இன்வேலிட் மதிப்பெண் முறை அறிமுகம்
குரூப் 4 தேர்வில் இன்வேலிட் மதிப்பெண் முறை அறிமுகம். தமிழ்நாடு முழுவதும் 7000 மையங்கள் சற்றுநேரத்தில் குரூப் 4 தேர்வுகள் தொடங்கவுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிரசித்தி பெற்ற பரிக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயிலின் குடமுழுக்கு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி ; முதுமலை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட குட்டி யானை
கோவை மாவட்டம் மருதமலை வனப் பகுதியில் கடந்த 30 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை 3 மாதமான குட்டி யானையுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு வனத் துறையினர் 5 நாட்கள் சிகிச்சை அளித்தனர். இதனிடையே தாயுடன் இருந்த மூன்று மாத குட்டி யானையை வனத் துறையினர் பராமரித்து வந்த நிலையில் அந்த குட்டி யானை தாயை பிரிந்து, அதன் கூட்டத்துடன் சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அந்த யானையை வனத் துறையினர் கண்காணித்து வந்த நிலையில், உடல் நலம் தேறிய தாய் யானை மீண்டும் அதே வனப் பகுதிக்குள் விடப்பட்டது.
இந்த நிலையில் கூட்டத்துடன் சுற்றி வந்த குட்டி யானையை கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியார் தோட்டத்திற்குள் சுற்றி வந்தது. இதனைத்தொடர்ந்து அங்கு சென்ற வனத் துறையினர் தாய் யானை இருக்கும் குப்பேபாளையம், அட்டுக்கல் வனப் பகுதிக்கு கொண்டு வந்தனர். குட்டி யானையை தாயுடன் சேர்க்க மேற்கொண்ட பல கட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தது. தற்போது வரை தாய் யானை குட்டியை தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் குட்டி யானை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்கான முயற்சிகள் தோல்வி அடைந்ததை அடுத்து, இன்று அதிகாலை யானைக் குட்டி சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்காக முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை நீட்டிப்பு. ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலி அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாதவரம் பால் பண்ணையில் இருந்து வடசென்னை பகுதிகளுக்கு ஆவின் பால் விநியோகம் தொடர்ச்சியாக காலதாமதமாகி வருவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். உடனடியாக அரசு இப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
டெல்லியில் நடைபெறும் விழாவில் பிரதமராக தொடர்ச்சியாக 3வது முறையாக மோடி இன்று பதவியேற்கிறார். இதனை முன்னிட்டு டெல்லியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, உள்ளூர் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
Background
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பணிகளுக்கான 6,244 காலி இடங்களுக்கு நடத்தப்படும் தேர்வு இன்று(09.06.2024) நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது.இந்த முறை பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் தொடர்ச்சியாக 3வது முறையாக மோடி பிரதமராக இன்று பதவியேற்கிறார். தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத பாஜக, கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியமைக்கிறது. இதனால் மத்திய அமைச்சரவையில் பல முக்கிய துறைகள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. பிரதமர் மோடி பதவியேற்பு விழாவை முன்னிட்டு டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- டி20 உலகக்கோப்பையில் நேற்று 4 போட்டிகள் நடந்தது. இதனிடையே இன்று 3 போட்டிகள் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு வெஸ்ட் இண்டீஸ் - உகாண்டா அணிகளும், இரவு 8 மணிக்கு இந்தியா - பாகிஸ்தான் அணிகளும், இரவு 11 மணிக்கு ஓமன் -ஸ்காட்லாந்து அணிகளும் மோதுகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை காண மிகப்பெரிய அளவில் ஆவல் ரசிகர்களிடத்தில் காணப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -