Breaking News LIVE: திமுக எம்.பி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்; நீட் தேர்வு, கலைஞர் 100 ஆண்டு விழா
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
திமுக கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், கோவையில் கலைஞர் நூற்றாண்டு விழா, பழைய நாடாளுமன்றத்தில் அகற்றப்பட்ட சிலைகளை அதே இடத்தில் வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
Mamata Banerjee: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக, கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்
டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி-க்கள் கூட்டம் தொடங்கியது. சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர்கள் பங்கேற்பு. எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.
யானைகள் இறப்பு விஷயத்தில் அரசு உரிய தீவிரம் காட்டவில்லை என்றால் நீதிமன்றம் கடும் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும். மின் வேலிகளில் சிக்கி யானைகள் இறப்பு தொடரும் பட்சத்தில், மின்வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடுமம் என வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருத்தணி முருகன் கோயிலில் நடிகர் பிரேம்ஜிக்கு நாளை திருமணம் நடைபெறவுள்ள நிலையில், கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு முன்னேற்பாடுகள் குறித்து பார்வையிட்டார் இயக்குநர் வெங்கட்பிரபு!
தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தைல் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களுடன் வெற்றி பெற்றது. இந்நிலையில், நாளை (09.06.2024) மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவை முன்னிட்டு டெல்லியில் நாளையும் (09.06.2024), நாளை மறுநாளும் (10.06.2024) 144 தடை உத்தரவு பிறப்பித்து டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் டிரோன்கள் மற்றும் பாரா கிளைடிங் போன்றவை பறக்கத் தடை என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
புதிதாக அமைய உள்ள மத்திய அமைச்சரவையில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு இரண்டு கேபினட் அமைச்சர் பதவி தரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்ய வேண்டும் என காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவரை தேர்வு செய்ய இன்று மாலை எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சி தலைவாராக நியமிக்க வலியுறுத்தியுள்ளதாக கே. சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய உயர்க்அல்வித் துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி டெல்லியில் செய்தியாளார்கள் சந்திப்பில் விளக்கம் அளித்து வருகிறார்.
”நீட் தேர்வில் 61 பேர் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வு நேரம் குறைவாக இருந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.
Maharashtra NEET : நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யக் கோரி மகாராஷ்டிரா அரசு கோரிக்கை!
Maharashtra NEET : நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யக் கோரி மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஹரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்றது பற்றி விரிவான விசாரணை நடத்த சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்துள்ளது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடவும் மஹாராஷ்டிர மாநில அரசு திட்டம். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக இன்று பிற்பகல் தேசிய தேர்வு முகமை விளக்கம் அளிக்க உள்ளது.
தூத்துக்குடியில் முதல் முறையாக ₹904 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், முல்லக்காடு கிராம பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது! நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை அரசு தனியார் பங்களிப்பு முறையில் அமைக்க இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது!
ஆந்திராவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான செருகூரி ராமோஜி ராவ் மறைவிற்கு காங்கிரஸ் கட்சி இரங்கள் தெரிவித்துள்ளது.
திரைத்துறை மற்றும் இதழியல் துறைக்கு ஈடில்லா பங்களிப்பை அளித்த ராமோஜி ராவ் இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது. மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சித்தராமையா, ப.சிதம்பரம், சசி தரூர் உள்ளிட்டோர் பங்கேற்கும் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
தேர்தல் முடிவுகள் குறித்தும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்!
Courtallam Falls : தென்காசி குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் சாரல் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மிதமான மழை முதல் கன மழை பெய்து வருகிறது . இந்த நிலையில் தொடர் மழையால் அருவிகள் மற்றும் நீர் வீழ்ச்சிகளில் நீர்வரத்தும் தற்போது அதிகரித்துள்ளது. இந்த சூழலில் கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக நீர்வரத்து ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது . தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை கண்டு சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ச்சியாக அடைந்து வருவதுடன் அருவியின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து தங்களது சுற்றுலாவை அனுபவித்து வருகின்றனர் . மேலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் நிலவும் குளிரையும் அனுபவித்து வருகின்றனர் . மேலும் வார விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் கணிசமாக அதிகரித்துள்ளது .
"தமிழ்நாட்டுக்கு 8 முறை வந்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவும் ரோடு ஷோ நடத்தினார்கள், இருந்தும் பாஜக வெற்றி பெறவில்லை" - சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு
ADMK Vote Percentage Edapadi Palanisamy Press meet : 1% வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளதால், அதிமுகவுக்கு இது வெற்றியே. மற்ற கட்சிகளில், அக்கட்சி தலைவர்கள் பலர் சென்று பிரச்சாரம் செய்தார்கள். அதிமுகவைப் பொறுத்தவரை நான் மட்டுமே அனைத்து இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்தேன் - எடப்பாடி பழனிசாமி
நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த 2 வாரங்களாக கிராமப்புற பகுதிகளில் காயத்துடன் சுற்றி திரிந்த சிறுத்தை, வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது. கால்நடை மருத்துவ குழுவினர் சிறுத்தையின் உடல் நிலையை ஆய்வு செய்தபின், சிறுத்தை வனப்பகுதிக்குள் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!
Thoothukudi Pocso Case : சிறுமி பாலியல் வழக்கில் தலைமை ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை!
தூத்துக்குடி : பள்ளி மாணவிக்கு பாலியல் வன்முறை செய்த வழக்கில், பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த்ராஜுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும், அரசின் நிவாரணத் தொகையில் இருந்து ரூ.லட்சம் வழங்குமாறு மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
பொழுதுபோக்கு மற்றும் இந்திய ஊடகம் ராமோஜி ராவ் என்ற தலைசிறந்த தலைவரை இழந்துள்ளது. ராமோஜி ராவ் ஆற்றிய பங்களிப்பு நீண்ட நினைவுகூரப்படும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கலை தெரிவித்துள்ளார்.
Background
- யூடியூபர் சவுக்கு சங்கர், சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்களுக்கு கொக்கைன் சப்ளை செய்ததாக பரணி மற்றும் சையத் நிவாஸ் ஆகியோரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில்லில் இருந்து நைஜீரிய நாட்டைச் சேர்ந்த லியோனார்டு என்பவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள 30 கிராம் கொக்கைன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- ராமோஜி பிலிம் சிட்டி நிறுவனர் ராமோஜி ராவ் தனது 87வது வயதில் இன்று காலை ஹைதராபாத்தில் காலமானார். இன்று அதிகாலை 3.45 மணியளவில் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. ராமோஜி ராவின் உடல் இறுதி தரிசனத்திற்காக ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படும். அங்கு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் மறைந்த ராமோஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த இருக்கின்றனர்.
- புதிய மத்திய அரசின் பதவி ஏற்பு விழா ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள சென்னை கோட்ட ரயில்வே பெண் லோகோ பைலட் ஐஸ்வர்யா எஸ். மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா இதுவரை இரண்டு லட்சம் மணி நேரங்கள் வந்தே பாரத், ஜன சதாப்தி போன்ற முன்னணி ரயில்களை இயக்கி உள்ளார். ரயில்வே சமிக்ஞைகளை (சிக்னல் ) உடனடியாக உள்வாங்கும் இவரது திறமை ரயில்வே அதிகாரிகளால் பாராட்டு பெற்றுள்ளது. சென்னை - விஜயவாடா, சென்னை - கோயம்புத்தூர் பிரிவில் துவக்க நாள் முதலே வந்தே பாரத் ரயில்களில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டி20 உலகக் கோப்பையின் 14வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதியது. கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 15.2 ஓவர்களில் 75 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களை இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -