Breaking News LIVE: தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, செய்தியாளர் சந்திப்பின்போது தேர்தல் ஆணையர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்
டெல்லி: கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி, அவரது உருவப் படத்துக்கு சோனியா காந்தி, ராஹுல் காந்தி, பரூக் அப்துல்லா, சீதாராம் யெச்சூரி, டி,ராஜா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்கள் இடொ, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு என்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வரை காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நலம் தேறியதை அடுத்து வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட காட்டு யானை
கோவை மருதமலை மலையடிவார பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு 4 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உட்பட 6 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. செங்கல்பட்டு பரனூர், சேலம் ஆத்தூர், விராலிமலை சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்ந்தது.
சென்னை, விழுப்புரம், கரூர் உள்பட தமிழ்நாட்டில் பரவலாக இரவில் கனமழை பெய்தது. ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் இரவில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
கலைஞர் கண்ட கம்பீரத் தமிழ்நாட்டை திமுக ஆட்சி உருவாக்கி வருகிறது. அனைத்து மாநிலங்களும் திரும்பி பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டுள்ளார்.
Background
- தனியார் நிலங்களில் கட்டப்பட்ட கோயில், சர்ச் வழிபாட்டு தலங்களை புதுப்பிக்க, கலெக்டரிடம் அனுமதி சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளித்தது தமிழ்நாடு அரசு.
- நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், நள்ளிரவு முதல் புதிய சுங்கக் கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கக்கட்டணம் ரூபாய் 5 முதல் ரூபாய் 20 வரையிலும், மாதாந்திர சுங்கக்கட்டணம் ரூபாய் 100 முதல் ரூபாய் 400 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.
- பாகிஸ்தான் ராணுவத்தில் மருத்துவ பிரிவில் பணிபுருந்த கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஹெலன் மேரி ராபட்ர்ஸ் என்ற பெண், பாகிஸ்தான் ராணுவத்தின் பிரிகேடியர் பதவியில் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
- தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் வருகின்ற 5ம் தேதி வரை தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்றும், 5ம் தேதி சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- மத்தியபிரதேச மாநிலத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கரில் திருமணத்திற்காக சென்ற டிராக்டர் கவிழ்ந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து ராஜ்கரின் பிப்லோடி கிராமத்திற்கு அருகே நடந்ததாக கூறப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -